CDC Layoffs (Photo Credit: @YahooNews X)

ஆகஸ்ட் 21, வாஷிங்டன் (Technology News): அமெரிக்கா நாட்டின் சுகாதார மற்றும் மனித சேவைத் துறை (HHS), சுகாதார நிறுவனங்களை திறமையாகவும், இன்னும் மேம்பட்ட சிறப்பம்சங்களை மாற்றுவதற்காக மறுசீரமைப்பு பணிகள், பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன் ஒரு பகுதியாக, கடந்த ஏப்ரல் 1, 2025 அன்று, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களான சிடிசி (CDC) மற்றும் பிற மத்திய சுகாதார நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு பணிநீக்க அறிவிப்புகளை அனுப்பியுள்ளது. Jio Recharge: இனி ரூ.249 பிளான் இல்லை.. குறைந்தபட்ச மாத ரீசார்ஜ் திட்டத்தை நீக்கியது ஜியோ.!

600 பேர் பணிநீக்கம்:

இந்நிலையில், அமெரிக்க அரசாங்க பணியாளர் கூட்டமைப்பு (AFGE) வெளியிட்ட அறிக்கையின்படி, சிடிசி-யில் மட்டும் சுமார் 2,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை அமெரிக்க அரசாங்க பணியாளர் கூட்டமைப்பு பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதன் பணிநீக்கம் (Layoffs) குறித்த அறிவிப்புகள் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. சமீபத்தில், சிடிசி வளாகத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதை அடுத்து, வன்முறை தடுப்புத் துறையில் பணிபுரிந்த 100 பேர் உட்பட 600 பேரை பணிநீக்கம் செய்துள்ளது.

சர்வதேச உறவு பாதிப்பு:

இதில், பாலியல் வன்முறை, குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை தடுப்பு போன்ற திட்டங்களில் பணிபுரிந்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையைக் கண்காணிக்க, பிற நாடுகளுக்கு உதவிய பணியாளர்களும் இதில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால், சர்வதேச உறவு பாதிக்கப்படும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மறுசீரமைப்பு பணிகள், அமெரிக்காவின் பொது சுகாதார பணிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.