Amazon (Photo Credit: Wikipedia)

ஜூன் 18, சியாட்டில் (Technology News): அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி (Amazon CEO Andy Jassy) ஒரு குறிப்பைப் பகிர்ந்து கொண்டார். அதில், ஜெனரேட்டிவ் AI வாடிக்கையாளர்களின் நன்மைகளுக்காகவும் வணிக நடவடிக்கைகளில் செலவுகளைக் குறைப்பதற்காகவும் அதைப் பயன்படுத்துவதாக கூறினார். கடந்த மே மாதம் நிறுவனம் அதன் செயல்பாடுகளை ஒழுங்கப்படுத்துவதற்காக சாதனங்கள் மற்றும் சேவைகள் பிரிவில் இருந்து ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இந்த பணிநீக்கம் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பாதித்தது. UPI: யுபிஐ பணம் அனுப்பும் வழிமுறையில் அதிரடி மாற்றம்.. வெளியான அறிவிப்பு.!

ஜெனரேட்டிவ் ஏஐ:

இந்நிலையில், நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஏஐ தொழில்நுட்பத்தால் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கலாம். ஏஐ மூலம் பல்வேறு பணிகளை மேற்கொள்ளலாம். நிறுவனத்தின் அனைத்து பகுதிகளிலும் ஏஐ பயன்பாடு அதிகரித்துள்ளது. விரைவில் இதற்கான பணிநீக்கங்கள் அறிவிக்கப்படும். நிறுவனம் தொடர்ந்து ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அமேசான் நிறுவனம் அதன் உள் செயல்பாடுகள் மற்றும் முன்னறிவிப்பு தேவைகள், ரோபோ செயல்திறனை மேம்படுத்த, ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது என ஆண்டி ஜாஸ்ஸி கூறினார். எங்களிடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜெனரேட்டிவ் ஏஐ சேவைகள் மற்றும் பயன்பாடுகள் செயல்பாட்டில் உள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

ஊழியர்கள் பணிநீக்கம்:

நிறுவனத்தில் ஜெனரேட்டிவ் ஏஐ பயன்படுத்துவதன் மூலம், நிறுவனத்தின் செலவுகளை குறைக்கவும், செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும் உதவும். அதே சமயத்தில், ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களின் சிறந்த அனுபவத்தை மேம்படுத்தும். இந்த 2025 ஆம் ஆண்டு, ஏஐ உட்பட பல காரணங்களால் தொழில்நுட்ப பிரிவில் இருந்து 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.