G Pay Logo | PhonePe Logo File Pic (Photo Credit: Wikimedia Commons)

ஜூன் 16, புதுடெல்லி (Technology News): தேசிய அளவில் யுபிஐ பரிவர்த்தனை நேரத்தை குறைக்க தேசிய பரிவர்த்தனை கழகம் இன்று முதல் புதிய வழிகாட்டலை அறிவித்திருக்கிறது. அதன்படி யுபிஐ செயல்களுக்கான பதில் அளிக்கும் நேரம் என்பது குறைக்கப்பட்டுள்ளது. நாம் ஒரு பயனருக்கு பணம் அனுப்பும்போது, ஒருவேளை பணம் அனுப்பும் முறையில் ((UPI Money Transfer) சிக்கல் ஏற்பட்டு பணம் பெயிலியர் ஆகிவிட்டால் நமது பணம் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டு விட்டதா? அல்லது தொழில்நுட்பக் கோளாறால் சிக்கலில் இருக்கிறதா? என்பதை கண்டறிய ரிவர்சல் நேரம் 30 நொடிகளில் இருந்து 10 நொடியாக (Time Reduction) குறைக்கப்பட்டுள்ளது. கரும்பு ஆலை நச்சுக்கழிவால் சோகம்.. அடுத்தடுத்து 13 பேர் பலி? 2 வாரத்தில் சோகம்.! 

பதிலளிக்கும் நேரம் குறைப்பு :

மேலும் யுபிஐ - ஐடியை (UPI) சரிபார்க்க விரும்புவோருக்கு அதற்கான ரெஸ்பான்ஸ் டைம் (UPI Response Time) ஆக 10 நொடிகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் விரைவாக பயண அனுபவத்தை மேம்படுத்தும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. வங்கி பரிவர்த்தனை சேவை வழங்குபவர்கள் தங்களது அமைப்புகளை மேம்படுத்தவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால் பணப்பரிவர்த்தனை (UPI Transaction) தாமதமாக ஏற்படும் வாய்ப்புகள் குறைந்து விடுகிறது. இதனால் பயன்பாடு வரும் காலங்களில் முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொழில் பயிற்சிகளும் குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.