
ஏப்ரல் 04, வாஷிங்டன் (Technology News): அமெரிக்காவில், மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் 1975ஆம் ஆண்டு, ஏப்ரல் 4ஆம் தேதி பில்கேட்ஸ் மற்றும் பால் ஆலன் ஆகியோரால் தொடங்கப்பட்டது. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் தவிர்க்க முடியாத ஒரு நிறுவனமாக மைக்ரோசாப்ட் மாறிவிட்டது. நிறுவனம் தொடங்கப்பட்டு, இன்றுடன் 50 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு நபரால் தொடங்கப்பட்ட நிறுவனத்தில் இன்று உலகம் முழுவதும் 2.28 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். நிறுவனம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு, பில்கேட்ஸ் சில உருக்கமான நினைவுகளை பகிர்ந்துள்ளார். Blue Whale Horror? 40 மாணவர்கள் கைகளை பிளேடால் அறுத்துக்கொண்ட கொடுமை.. அச்சத்தில் பதறும் பெற்றோர்.. பகீர் காரணம்.!
மலரும் நினைவுகளை பகிர்ந்த பில்கேட்ஸ்:
அதில், 50 ஆண்டுகள் என்பது மிகப்பெரிய சாதனை. ஸ்டீவ் பால்மர் மற்றும் சத்யா நாதெல்லா போன்ற முன்னோடி தலைவர்கள் இல்லாமல் இந்த சாதனைகள் சாத்தியமில்லை. நானும், பால் ஆலனும் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் இதழ் வெளியிட்ட அட்டைப்பட கட்டுரையை பார்த்தோம். அதில், மிட்ஸ் என்ற எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உருவாக்கிய கணினி பற்றிய கட்டுரை ஒன்று இருந்தது. அப்போது, உலகில் பர்சனல் கம்ப்யூட்டர் (Personal Computers) புரட்சி வரப்போகிறது என்பதை நாங்கள் இருவரும் புரிந்துகொண்டோம். அதில், முன்னணியில் இருக்கவும் நாங்கள் இருவரும் விரும்பினோம். அக்காலத்தில் பர்சனல் கம்ப்யூட்டர்கள் எங்கும் கிடையாது. நாங்கள் இருவரும், மிட்ஸ் நிறுவன கம்ப்யூட்டருக்கு ஏற்ற ப்ரோக்ராம் தயார் செய்ய முடியும் என்று அதன் உரிமையாளரை நேரில் சந்தித்து கூறினோம். அதற்கு அவர் ஒப்புக்கொண்டார். அதற்கென நாங்கள் இருவரும், 'பேசிக்' என்ற கம்ப்யூட்டர் மொழியை கற்றுக் கொண்டு, ப்ரோக்ராமிங் செய்தோம். அப்படி உருவானது தான் மைக்ரோசாப்ட் நிறுவனம். இவ்வாறு பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
சிறந்த கோடிங்:
இந்நிலையில், தனது பில்கேட்ஸ் தனது நிறுவனம் தொடங்கியது போது சந்தித்த சவால்கள் குறித்து தெரிவித்துள்ளார். தான் எழுதிய முதல் கோடிங்-ஐ (Coding) பில்கேட்ஸ் பகிர்ந்துள்ளார். அவர், இது நான் எழுதியதிலேயே மிகவும் அருமையான கோடிங் என குறிப்பிட்டுள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டு மைக்ரோசாப்டின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து பில்கேட்ஸ் விலகினார். தற்போது, தலைமை நிர்வாக அதிகாரியாக சத்யா நாதெல்லா இருக்கிறார்.