School Student Sad (Photo Credit: @gamingamigos24 / Pixabay)

மார்ச் 26, அகமதாபாத் (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் (Surat) மாவட்டம், பர்டோலி தாலுகா, மோட்டா கிராமத்தில், முஞ்சியாசர் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பலரும் பயின்று வருகின்றனர். இதனிடையே, சம்பவத்தன்று பள்ளி மாணவர்கள் 40 க்கும் மேற்பட்டோர், தங்களின் கைகளில் பிளேடால் வெட்டிக்கொண்டனர். மாணவர்கள் வீட்டுக்கு சென்றதும், கைகளில் இருக்கும் காயத்தை கண்ட பெற்றோர் விசாரித்தனர். அப்போது, ரூ.10 பணத்துக்காக கைகளை வெட்டியதாக தெரிவித்தனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளிக்குச் சென்றபோது, அங்கு மொத்தமாக 40 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியரின் பெற்றோரும் வருகை தந்தனர். இதனால் காவல்துறையினர் தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். அம்மாடியோவ்.. கரும்பு இயந்திரத்தில் சிக்கிக்கொண்ட பெண்ணின் முடி.. பதறவைக்கும் காட்சிகள்.. தப்பிய உயிர்.! வீடியோ உள்ளே.! 

ஆன்லைன் விளையாட்டு சேலஞ்சா? என அதிகாரிகள் விசாரணை:

அப்போது, பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவரால், ரூ.10 பணத்துக்காக கைகளை பிளேடால் அறுக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது தெரியவந்தது. ரூ.10 பணத்துக்காக 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள், இச்செயலையும் மேற்கொண்டு இருக்கின்றனர். பென்சிலை சீவ பயன்படும் ஷார்ப்னர் பிளேடு கொண்டு கைகளை கிழித்து காயப்படுத்தியுள்ளனர். காயத்தினை காண்பித்து ரூ.10 பணம் பெறப்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் இவ்வாறான செயலை மேற்கொள்ள ஊக்குவித்த மாணவர் யார்? மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணிக்காமல் ஆசிரியர்கள் என்ன செய்தனர்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடந்த காலங்களில் பல அப்பாவி சிறார்களின் உயிரை பறித்த புளூவேல் (Blue Whale Game) விளையாட்டுகளைப் போல, ஏதேனும் ஆன்லைன் விளையாட்டு விளையாடி, அதன் பேரில் இவ்வாறான விஷயத்துக்கான முன்னெடுப்பு நடந்ததா? என விசாரணை நடக்கிறது.