BSNL Logo (Photo Credit: Wikipedia)

ஆகஸ்ட் 14, சென்னை (Technology News): பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடோபோன் ஐடியா வழங்கும் திட்டங்களை விட குறைந்த விலையில் பல்வேறு சிறந்த திட்டங்களை வழங்கி வருகிறது. தற்போது, 4ஜி சேவைகளை வழங்கி வரும் நிலையில், அடுத்த ஆண்டு 5ஜி சேவைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் மூன்று முக்கியமான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் முழு விவரங்களை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். TECNO Spark Go 5G: 6000mAh பேட்டரி.. டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி.., பட்ஜெட் விலையில் நாளை அறிமுகம்..!

ரூ. 2399 ப்ரீபெய்ட் திட்டம்:

இத்திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் லோக்கல் கால், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் வேலிடிட்டி 395 நாட்கள் ஆகும். ஒட்டுமொத்தமாக 790ஜிபி டேட்டா இருக்கும்.

ரூ. 1999 ப்ரீபெய்ட் திட்டம்:

இத்திட்டத்தில் தினமும் லிமிட் இல்லாத டேட்டா கிடைக்கும். ஒட்டுமொத்தமாக 600ஜிபி டேட்டாவை இதில் பெறலாம். இதன் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இதில் வழக்கம் போல 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் லோக்கல் கால், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகள் உள்ளன.

ரூ. 1499 ப்ரீபெய்ட் திட்டம்:

336 நாட்கள் வேலிடிட்டி உள்ள இத்திட்டத்தில், 24ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். மேலும், 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகள் உள்ளன. அதிக நாள் வேலிடிட்டி, குறைந்த அளவிலான டேட்டா பயன்படுத்துவோருக்கு இந்த ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

தற்போது, 300 நாட்களுக்கு மேல் வேலிடிட்டி, அன்லிமிடெட் சலுகைகளை ரூ.2399, ரூ.1999, ரூ.1499 போன்ற ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்குகின்றன. வரும் காலங்களில் பிஎஸ்என்எல் நிறுவனம், 5ஜி சேவையை நாடு முழுவதும் அறிமுகம் செய்தால், இன்னும் அதிகமான நாட்கள் கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்கள் அறிமுகமாகும்.