ஜூலை 16, சென்னை (Technology News): சர்வதேச அளவில் 800 மில்லியன் பயனர்களின் கவனம் பெற்ற ஓபன் ஏஐ (Open AI) நிறுவனத்தின் (ChatGPT) இன்று காலை முதல் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று காலை 6 மணி முதல் சேட்ஜிபிடியிடம் எந்த கேள்வியை கேட்டாலும் 'Too many Requests' என்பதை போல பதில் கூறி வருகிறது. மேலும் இணையம், இணைய கோளாறு இருப்பதாகவும் அது பதில் அளித்து இருக்கிறது. பலருக்கும் சேட்ஜிபிடி லாகின் (Login) செய்யும் முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.
திடீர் முடக்கம் :
இந்தியா, வட அமெரிக்கா, ஐரோப்பிய போன்ற நாடுகளில் இதனால் சேட்ஜிபிடி முடங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை சரி செய்யும் பணியில் ஓபன் ஏஐ நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமான சேட்ஜிபிடி தற்போது உலகளவில் மிகப்பெரிய கவனம் பெற்றுள்ள நிலையில், அது முடங்கி இருப்பது பயனர்களை அவதிக்குள்ளாக்கி இருக்கிறது. இதனால் என்ன செய்வது என தெரியாமல்? பலரும் X உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குமுறி வருகின்றனர்.
பயனர்கள் குமுறல் :
why is chatgpt down pic.twitter.com/a4PkXdCHrL
— Alex (@alexlandings) July 16, 2025
ChatGPT is gone, out, down, finito pic.twitter.com/Gyt5zIPB2i
— Al Pargata (@alexpargata) July 16, 2025