![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/images/2025/02/bell.jpg?width=380&height=214)
பிப்ரவரி 12, கனடா (Technology News): கனடாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு நிறுவனமான பெல் (Bell) நிறுவனம் 1,200 பேரை பணிநீக்கம் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழில்துறையில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்த வேலைகள் குறைக்கப்பட்டுள்ளன. தொழிற்சங்க ஊழியர்களை பணிநீக்கம் (Layoffs) செய்ய பெல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. Financial Facts: நிதித் துறையில் தவிர்க்க வேண்டிய சில தவறுகள்.. கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.!
பெல் பணிநீக்கம்:
பெல் கனடா பணிநீக்க நடவடிக்கை குறித்து தெரிவித்த யூனிபோரின் தேசியத் தலைவர் லானா பெய்ன், பணிநீக்கங்கள் தற்காலிகமாக செலவுகளை குறைப்பதற்கான ஒரு திட்டமாகும். நிறுவனத்தின் லாபத்தை கூட்டும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தற்போது 1,200 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளனர்.
பெல் நிறுவனத்தில் 1200 ஊழியர்கள் பணிநீக்கம்:
🚨 LAYOFF ALERT - Toronto, Canada 🇨🇦
Bell plans to layoff 1,200 unionized employees, attributing the move to "unprecedented challenges" in the telecom industry. pic.twitter.com/wflmxYfCIV
— The Layoff Tracker 🚨 (@WhatLayoff) February 12, 2025