Bitchat App (Photo Credit : @nextindiatimes X)

ஜூலை 09, வாஷிங்டன் டிசி (Technology News): சோசியல் மீடியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய எக்ஸ் தளத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி தற்போது தனது அடுத்த கண்டுபிடிப்பான பிட்சாட் (Bitchat) என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளார். வாட்சப், டெலிகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்த நமக்கு நெட்வொர்க் என்பது கட்டாயமாகிறது. ஆனால் பிட்சாட் செயலியை இணைய வசதி இல்லாமலும் மெசேஜ் போல பயன்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த பிட்சாட் செயலி செய்திகளை அனுப்பவும், பெறவும் ப்ளூடூத் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்கிறது. Honor X70: 8300mAh பேட்டரி.. 80W பாஸ்ட் சார்ஜிங்.. ஹானர் எக்ஸ்70 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்..!

இணைய முடக்கத்திலிருந்து பாதுகாப்பு :

இதன் வாயிலாக பயனர்கள் தங்களது நெட்வொர்க் கவரேஜ் இல்லாத இடத்திலும் தகவல்களை பரிமாறிக்கொள்ள இயலும். பேரிடர் காலங்களில் தொலைதூர கிராம புறத்தில் இருக்கும் மக்களுக்கு இது பயனுள்ளதாக அமையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்த செயலி பயனர்களின் தரவு மற்றும் அவர்களின் தனியுரிமையை உறுதிப்படுத்துகிறது. திடீர் இணைய முடக்கத்திலிருந்தும் பாதுகாக்கிறது. ஜாக் டோர்சி இதுகுறித்து கூறுகையில், பிட்சாட் (BitChat) செயலியை தற்போது டெஸ்டிங்கிற்கு உட்படுத்தியுள்ளதாகவும், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் (Apple App Store) விரைவில் அறிமுகமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜாக் டோர்சியின் பிட்சாட் செயலி :