
மே 27, சென்னை (Technology News): ஐபிஎம் (IBM) நிறுவனம் சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த பணிநீக்கங்கள் நிறுவனத்தின் மனிதவள (HR) துறையை பாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபிஎம் நிறுவனம், ஏஐ காரணமாக 200 பணியாளர்களை ஆரம்பத்தில் நீக்கியது. பின்னர், எச்ஆர் துறையிலும் பல 100 பேரை நீக்கியது. மனிதர்களின் தினசரி ஈடுபாடு இல்லாத வேலைகள் அனைத்தையும் ஐபிஎம் நிறுவனம், ஏஐ வைத்து மாற்ற முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, உலகளவில் ஐபிஎம் நிறுவனம் சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. AI: அப்டேட் செய்ய முயன்ற டெவலப்பருக்கு மிரட்டல்.. பிளாக்மெயில் செய்த AI.!
ஐபிஎம் பணிநீக்கம்:
ஐபிஎம் சுமார் 200 எச்ஆர் பணியிடங்களை ஏஐ மூலம் மாற்றியது. அதாவது, எச்ஆர் செய்யும் எல்லா பணிகளையும் செய்துவிடும் என்பதால் பெரும்பாலான அளவில் எச்ஆர் ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல் கோடிங், டெஸ்டிங் செய்யக்கூடிய பணியாளர்கள், உயர் மேனேஜர் பொறுப்பில் உள்ளவர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் ஏஐ பயன்பாடு அதிகளவில் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். அதாவது, ஏஐ பயன்பாட்டை 2 மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளனர். இதனால் பணிநீக்கம் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.