செப்டம்பர் 25, கலிபோர்னியா (Technology News): இன்றளவில் நாம் திரையரங்கு, கண்காட்சி உட்பட பல இடங்களுக்கு செல்லும்போது ஆவலுடன் சாக்லேட் பாப்கார்ன் (Chocolate Popcorn), மசாலா பாப்கார்ன் (Masala Popcorn) ஆகியவற்றை வாங்கி சாப்பிடுவோம். என்றாவது பாப்கார்ன் எப்படி கண்டறியப்பட்டு இருக்கும் என சிந்தித்து இருப்போமா?. உலகளவில் வணிகமயக்கப்பட்ட உணவுப்பொருட்களில், பாப்கார்னுக்கு மிகப்பெரிய இடம் உண்டு. கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மெக்சிகோவில் கண்டறியப்பட்ட சோளக்கதிர்களை, அங்குள்ள மக்கள் சாப்பிட்டு வந்துள்ளனர். Laddu Parithapangal: கோபி-சுதாகரின் லட்டு பரிதாபங்கள் வீடியோவால் சர்ச்சை? டெலிட் செய்யப்பட்ட பதிவு; வைரலாக்கும் நெட்டிசன்கள்.!
முதன் முதலில் தயாரிக்கப்பட்ட பாப்கார்ன் (Popcorn):
1890 வாக்கில் மக்களுக்கு மொறுமொறுப்பான தின்பண்டம் தேவைப்பட்டபோது, சோளத்தை வைத்து பாப்கார்ன் கண்டறியப்பட்டது. முதலில் அப்படியேவும், பின் சுவைக்காக மசாலா சேர்த்தும் பாப்கார்ன் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு இன்று உலகளவில் மிகப்பெரிய வணிகத்தை கொண்டுள்ளது. 1890 களில் சார்லஸ் கிரெட்டர்ஸ் என்பவர், நீராவி பொருத்தப்பட்ட அமைப்பு கொண்டு பாப்கார்ன் தயாரித்து வாகனத்தில் கொண்டு சென்று விற்பனை செய்துள்ளார் என்பது வரலாற்று தகவலாக கவனிக்கப்படுகிறது.
கூகுளின் சிறப்பு டூடுல் (Google Doodle):
மக்காசோளத்தின் இந்த வரலாற்றை உலகுக்கு உணர்த்தும் பொருட்டு, கூகுள் நிறுவனம் இன்று தனது டூடுலை வெளியிட்டு இருக்கிறது. பாப்கார்னை கொண்டாடும் விதமாக (Celebrating Popcorn Doodle) வெளியிட்டுள்ள கூகுளின் டூடுல், இன்று பிரத்தியேகமாக விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டூடுல் கெவின் லாஃப்லின், மாட் க்ரூக்ஷாங்க் ஆகிய ஓவிய வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டு, தொழில்நுட்ப குழுவால் மேம்படுத்தப்பட்டுள்ளது.
கண்காட்சிகள் முதல் திரைப்படங்கள் வரை மசாலா / சாக்லேட் சுவையுடன் கொண்டாட பாப்கார்ன் சாப்பிடுங்கள்:
கண்காட்சிகள் முதல் திரைப்படங்கள் வரை, ஒவ்வொரு நாளையும் மசாலா / சாக்லேட் சுவையுடன் கொண்டாட வழிவகுத்த பாப்கார்ன் (சோளப்பொரி)-ஐ சிறப்பித்து இன்றைய கூகுள் டூடுல்.. #GoogleDoodle | #Popcorn https://t.co/at5NHubcjS
— Sriramrpckanna (@Sriramrpckanna1) September 25, 2024