France Enshrines Abortion Rights (Photo Credit: @MrPopOfficial X)

மார்ச் 05, பாரிஸ் (Paris): ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் (France) பெண்கள் கருக்கலைப்பு (Abortion) செய்வதை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாற்ற வேண்டும் என்று அங்குள்ள பெண் செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். குறிப்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது அடிப்படை உரிமை இல்லை என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து பிரான்சில் போராட்டம் தீவிரமானது. Germany Fire: ஜெர்மனி நாட்டின் முதியோர் காப்பகத்தில் தீ விபத்து.. 4 பேர் பலி..!

இதையடுத்து, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) இதற்கான உறுதிமொழியை அளித்து இருந்தார். இந்த நிலையில், தான், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பெண்களின் அடிப்படை உரிமையாக கரு கலைப்பை அங்கீகரிக்கும் சட்ட மசோதா நிறைவேறியுள்ளது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக 780 உறுப்பினர்களும், எதிராக 72 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதனால் பெரும்பான்மை ஆதரவுடன் இந்த மசோதா பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் (French parliament) நிறைவேறியது. இதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமையை வழங்கும் முதல் நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது.