ஆகஸ்ட் 10, கலிபோர்னியா (Technology News): அமெரிக்காவின் பிரபலமான வணிக நிர்வாகி, யூடியூப் செயலியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சூசன் வோஜஸிக்கி (Susan Wojcicki). கூகுள் நிறுவனத்தின் தொடக்கத்தில், மிகப்பெரிய உறுதுணையாக விளங்கிய சூசன், டென்னிஸ் ட்ராப்பார் (Dennis Troper) என்பவரை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். தொடர்ந்து தனது பணிகளிலும் கவனத்தை செலுத்திய சூசன், யூடியூப் நிறுவனத்தை தலைமையேற்று திறம்பட நடத்தி வந்தார். எக்கனாமிக்ஸ் துறையில் பிஎச்டி, எம்எஸ் எக்கனாமிக்ஸ், எம்பிஏ என பல பட்டங்களை பெற்று தனது திறமைகளை வளர்த்துக்கொண்ட சூசன், கடந்த சில ஆண்டுகளாக நுரையீரல் சார்ந்த புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். WhatsApp Verification Tick: வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்.. சரிபார்ப்பு பேட்ஜை பச்சை நிறத்தில் இருந்து நீல நிறத்திற்கு மாற்ற முடிவு..!
எங்களை விட்டு பிரிந்தார்- கணவர் உருக்கம்:
இந்நிலையில், சூசன் தனது 56 வயதில், இன்று மரணம் அடைந்தார். இந்த தகவலை உறுதி செய்துள்ள சூசனின் கணவர் டென்னிஸ், தனது முகநூல் பக்கத்தில் சோகமான தகவல் ஒன்றை தெரிவித்து மனைவியின் மரணத்தை உறுதி செய்துள்ளார். அந்த தகவலில், "சூசனின் மறைவுசெய்தியை நான் இங்கு ஆழ்ந்த வருத்தத்துடன் பகிர்கிறேன். கடந்த 26 ஆண்டுகளாக எனது அன்பு மனைவியாகவும், எங்களின் ஐந்து குழந்தைகளுக்கு தாயாகவும் இருந்தவர், கடந்த 2 ஆண்டுகளாக நுரையீரல் சாந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இன்று எங்களை விட்டு பிரிந்தார்.
எனக்கு சிறந்த தோழியாக, வாழ்க்கையில் துணையாக, புத்திசாலித்தனம் கொண்ட நபராக, அன்பான தாயாக, பலருக்கும் தோழியாக இருந்து வந்தவர், எங்களின் குடுமப்த்தில் மட்டுமல்லாது உலகளவில் ஏற்படுத்திய தாக்கங்கள் அளவிட இயலாதது. நாங்கள் மனமுடைந்து இருக்கிறோம். ஆவலுடன் இருந்த நேரத்திற்கு நன்றியுள்ள நபராக நாங்கள் இருக்கிறோம். இக்கடினமான தருணத்தில் எங்களுடன் துணைநிற்கும் அனைவர்க்கும் நன்றி" என தெரிவித்துள்ளார்.
சூசனின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை (Sundar Pichai), "அவரின் மரணத்தை என்னால் தற்போது வரை நம்ப முடியவில்லை" என கூறினார்.