Google News Down (Photo Credit: @iainoverton X / Wikipedia Commons).jpg

மே 31, புதுடெல்லி (New Delhi): சர்வதேச அளவில் 35 க்கும் மேற்பட்ட மொழிகளில் செய்தி சேவையை செயலி மற்றும் இணையப்பக்கம் வாயிலாக கூகுள் நிறுவனம் வழங்கி வருகிறது. கூகுள் நியூஸ் (Google News) பக்கத்தில் கடந்த 2001ம் ஆண்டு முதல் 22 ஆண்டுகளை கடந்து இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது.

தொழில்நுட்ப கோளாறால் பயனர்கள் அவதி: 4,500 க்கும் மேற்பட்ட செய்தி தளங்கள் வாயிலாக பல மொழிகளில் செய்திகள் தொடர்ந்து வழங்கவும் கூகுள் தனது சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், உலகளவில் கூகுள் நியூஸ் பக்கத்தின் பயன்பாடு என்பது முடங்கி இருக்கிறது. இதனால் கூகுள் தளத்தை நேரடியாக பயன்படுத்தி செய்திகளை படிக்கும் பயனர்கள் அவதியுற்றுள்ளனர்.  Monsoon Arrives In Kerala: தென்மேற்கு பருவமழை துவக்கம்.. அறிக்கை வெளியிட்ட புவி அறிவியல் அமைச்சகம்..!

மேலும், தொழில்நுட்ப கோளாறினை சரிசெய்யும் பணிகளை கூகுள் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். உலகளவில் அரபி, பெண்களை, பல்கெரியன், சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், கிரீக், ஹிந்தி, இத்தாலியன், இந்தோனேசியன், ஜப்பானில், கன்னடா, கொரியன், மலையாளம், போலிஷ், ரோமானியன், ரஷியன், சேர்பியன், ஸ்பேனிஷ், தமிழ், தெலுங்கு, தாய், உக்ரைனியன், வியட்நாமிஸ் உட்பட பல மொழிகளில் செய்திகளை வழங்கி வருகிறது.