ஆகஸ்ட் 22, நியூயார்க் (Technology News): கூகுள் நிறுவனம் தனது ப்ரீமியம் ஸ்மார்ட்போன் தொடரில், பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை (Pixel 10 Series) நியூயார்க் நகரில் மேட் பை கூகுள் 2025 (Made by Google 2025) நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில், பிக்சல் 10 (Pixel 10), பிக்சல் 10 ப்ரோ (Pixel 10 Pro), பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 10 Pro XL) மற்றும் பிக்சல் 10 ப்ரோ போல்ட் (Pixel 10 Pro Fold) என மொத்தம் 4 மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவையனைத்திலும், கூகுளின் புதிய டென்சோர் ஜி5 பிராசெஸ்சர் (Tensor G5 Processor) உடன், ஆண்ராய்டு 16 மூலம் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், 7 ஆண்டுகள் வரை ஓஎஸ் அப்டேட் மற்றும் செக்யூரிட்டி பேட்ச் கிடைக்கும் என கூகுள் நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து இப்பதிவில் பார்க்கலாம். CDC Layoffs: சிடிசி நிறுவனத்தில் 600 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!
கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10):
- இதில், 6.3 இன்ச் FHD + OLED திரையுடன், 120Hz புதுப்பிப்பு விகிதம் மற்றும் 3,000 நைட்ஸ் பிரகாசத்துடன் வருகிறது.
- கேமராவை பொறுத்துவரை, பின்புறத்தில் 48எம்பி முதன்மை கேமரா, 13எம்பி அல்ட்ரா-வைட், 10.8எம்பி டெலி போட்டோ OIS, EIS ஆதரவுடன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 10.5எம்பி செல்பி கேமரா உள்ளது.
- பேட்டரி பொறுத்தமட்டில், 4,970mAh பேட்டரி கொண்ட 30W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ.79,999 ஆகும்.
கூகுள் பிக்சல் 10 ப்ரோ (Google Pixel 10 Pro):
- இதில், 6.3 இன்ச் LTPO OLED திரை மற்றும் 3,300 நிட்ஸ் பிரகாசம் கொண்ட கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு வசதியுடன் உள்ளது.
- பின்புறத்தில் 50எம்பி முதன்மை கேமரா, 48எம்பி அல்ட்ரா-வைட் மற்றும் 48எம்பி டெலி போட்டோ 5x ஆப்டிகல் ஜூம் கொண்டது. செல்பி கேமரா முன்புறத்தில் 42எம்பி கொடுக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ.99,999 ஆகும்.
கூகுள் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் (Google Pixel 10 Pro XL):
- இதில், 6.8 இன்ச் LTPO OLED திரையுடன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே உள்ளது.
- பிக்சல் 10 ப்ரோ மாடலைப் போன்று, இதிலும் கேமரா அமைப்பு பின்புறத்தில் 50எம்பி முதன்மை கேமரா, 48எம்பி அல்ட்ரா-வைட் மற்றும் 48எம்பி டெலி போட்டோ 5x ஆப்டிகல் ஜூம் கொண்டது. செல்பி கேமரா முன்புறத்தில் 42எம்பி கொடுக்கப்பட்டுள்ளது.
- பேட்டரியை பொறுத்தவரை, 5,200mAh பேட்டரி திறன் கொண்ட 45W வயர்டு மற்றும் 25W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.
- இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ.1,19,999 ஆகும்.
கூகுள் பிக்சல் 10 ப்ரோ போல்ட் (Google Pixel 10 Pro Fold):
- வெளிப்புறத்தில் 6.4 இன்ச் Actua OLED கவர் டிஸ்ப்ளே, உட்புறத்தில் 8 இன்ச் சூப்பர் ஆக்டுவா பிளெக்ஸ் டிஸ்ப்ளே உள்ளது.
- கேமரா பொறுத்தவரை, பின்புறத்தில் 48எம்பி முதன்மை கேமரா, 10.5எம்பி அல்ட்ரா-வைட், 10.8எம்பி டெலி போட்டோ 5x ஆப்டிகல் ஜூம் கொண்டது. முன்புறத்தில் இரட்டை 10எம்பி செல்பி கேமரா உள்ளது.
- பேட்டரி பொறுத்தவரையில், 5,015mAh பேட்டரி மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ.1,72,999 ஆகும்.