பிப்ரவரி 09, புதுடெல்லி (New Delhi): இன்று எல்லார் கையிலும் ஸ்மார்ட்போன் (Smartphone) எப்பவும் உள்ளது. இந்த செய்தியை கூட அதில் தான் எல்லாரும் படித்து இருப்பீர்கள். அப்படிப்பட்ட ஸ்மார்ட் போன், பல நேரங்களில் சூடாகிறது. அதுவும் திரையைத் தொட்டாலே கொதிக்கும்.
நீங்கள் நாள் முழுவதும் உங்கள் மொபைலில் இருப்பவராக இருந்தால், அது உங்கள் ஃபோன் பேட்டரி அதிக நேரம் வேலை செய்ய வழிவகுக்கும் மற்றும் உங்கள் ஃபோனை அதிக வெப்பமடையச் செய்யலாம். ஒரே நேரத்தில் நிறைய ஆப்ஸைத் திறந்து வைத்தாலும் வெப்பம் அடையலாம். 100% ஐ அடைந்த பிறகு உங்கள் மொபைலை சார்ஜரில் வைக்கும்போதும் வெப்பம் அடையலாம். Cotton Candy Ban: பஞ்சுமிட்டாய் சாப்பிட்டால் புற்றுநோயா?. விரட்டி அடிக்கும் உணவு பாதுகாப்புத்துறையினர்..!
ஸ்மார்ட்போன் சூடாகாமல் பாதுகாக்கும் வழிகள்: அதிக வெப்பத்தைத் தடுப்பதற்கான எளிதான வழி, உங்கள் தொலைபேசியை சூரிய ஒளியில் இருந்து விலக்கி வைப்பதாகும். உங்கள் ஃபோன் சூரியனில் இருந்து வெளிச்சம் மற்றும் வெப்பத்தைப் பிடித்து, அதைத் தக்க வைத்துக் கொள்கிறது, சூரிய ஒளி மற்றும் வெப்பத்தில் இருக்கும் போது அது வெப்பமாகிறது.
உங்களுடைய போனுக்கான சார்ஜரை மட்டும் பயன்படுத்த வேண்டும். ஏதாவது பழுது ஏற்பட்டு மொபைல் போனின் பேட்டரியை மாற்றும் போது, எக்காரணம் கொண்டு போலியான அல்லது மலிவான பேட்டரிகளை வாங்காதீர்கல். அது உங்கள் போனிற்கே ஆபத்தாக அமையலாம். போலி பேட்டரிகள் எளிதில் சூடாகி விடும். சில நேரங்களில் அதிக வெப்பத்தினால் வெடிக்கும். தேவையற்ற செயலிகளை தவிர்ப்பது மிக நல்லது. இதனால் அதிகம் பேட்டரி வீணாவதோடு, போனின் வெப்பமும் அதிகமாகும்.