ஜூன் 04, சென்னை (Odisha Train Accident): ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு இரயில் மீது, 130 கி.மீ வேகத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் அதிவிரைவு இரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த தடம்புரண்ட பெட்டிகள் மீது சில நிமிடம் கடந்து வந்த பெங்களூர் - ஹவுரா துரந்தோ அதிவிரைவு இரயிலும் மோதி அடுத்தடுத்து 3 இரயில்கள் தடம்புரண்டன.
இந்த விபத்தில் பெங்களூரில் இருந்து ஹவுரா சென்ற ரயிலுக்கு பெரிய அளவிலான பாதிப்பு இல்லை. அதன் 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து இறங்கி நின்றது. ஆனால், கோரமண்டல் அதிவிரைவு இரயில் எஞ்சினுக்கு அடுத்து 7 பெட்டிகள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்தில் சிக்கியது. இதனால் தற்போது வரை 288-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 900 க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து நடந்த விசாரணையில், கணினி பதிவுகளின்படி சரக்கு இரயில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், நேராக செல்லவேண்டிய கோரமண்டல் அதிவிரைவு வண்டிக்கான பாதையை மாற்றாமல், சரக்கு இரயில் வழித்தடத்தில் கோரமண்டல் செல்ல லைன் கொடுக்கப்பட்டுள்ளது. இடையே வேறு நிறுத்தம் இல்லாததால் 130 கி.மீ வேகத்தில் வந்த கோரமண்டல் இரயில், சரக்கு இரயில் மீது மோதி பயங்கர விபத்தை சந்தித்துள்ளது. Disney Layoff: இயக்குனர்கள், தயாரிப்பாளர் உட்பட 75 பேரை பணிநீக்கம் செய்தது வால்ட் டிஸ்னி நிறுவனம்; அதிரடி முடிவு.!
முழுக்க முழுக்க மனித தவறு & அலட்சியம் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இந்திய இரயில்வே துறையில் பல தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளது, இனி விபத்துகள் குறையும் என பல விஷயங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இரயில் நேருக்கு நேர் வந்தாலும் இனி தானியங்கு முறையில் அவை நிறுத்தி விபத்து தவிர்க்கப்படும் என கூறப்படுகிறது. இவ்வுளவு சிறப்பம்சம் இருந்தும் எப்படி விபத்து நிகழ்ந்தது என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.
லூப் லைனில் சரக்கு இரயில் நிற்க, மெயின் லைனில் செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு டிராக் மாற்றப்படாமல் இருந்துள்ளது. இரயில் தொடர்ந்து பயணிக்க மெயின் லைனில் சிக்னல் அனுமதி கிடைத்ததால், அருகே நிறுத்தமும் இல்லாததால் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் 130 கி.மீ வேகத்தில் பயணித்துள்ளது. அப்போது, மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு டிராக் மாறி சென்ற கோரமண்டல் அதிவிரைவு இரயில் விபத்தில் சிக்கியுள்ளது.
விபத்தில் இருந்து தப்பிக்க மேலை நாடுகளின் தொழில்நுட்பங்களை ஆராய்ந்து, அதற்கேற்ப நமது கட்டமைப்புகளை இன்னும் பலப்படுத்தவேண்டிய தருணத்தை நாம் இங்கு உணர வேண்டும். இந்தியாவின் நட்பு நாடுகளான ஜப்பான், ஜெர்மனி, தென்கொரியா, இங்கிலாந்து, ஸ்பெயின் உட்பட பல நாடுகளிலும் அதிவேக இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அங்கு தொழில்நுட்பம் என்பது பூரணமாக இருக்கும் என்பதால், நட்பு ரீதியாக தொழில்நுட்பங்களை பெற்று, அவற்றை இந்திய இரயில்வே உபயோகம் செய்துகொள்ள வேண்டும். Health Tips: அன்றாடம் சாப்பிடும் கீரையில் நிறைந்துள்ள சத்துக்கள் எவை?.. புள்ளி விபரத்துடன் தெரிந்துகொள்ளுங்கள்.!
இன்றளவில் இருக்கும் தொழில்நுட்பத்தை நாம் நமக்கு ஏற்றாற்போல உபயோகம் செய்ய வேண்டும். வரலாற்றில் மிகப்பெரிய விபத்தாக பதிவாகியுள்ள ஒடிசா இரயில் விபத்து மூலமாக நாம் நம்மை இன்னும் நல்ல வகையிலான கட்டமைப்புகளை மேற்படுத்த வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த முறைகள் குறித்து இன்று தெரிந்துகொள்ளலாம்.
இரயிலின் இயக்கத்தையும், தண்டவாளங்கள் அமைப்பு முறைகளையும் கண்காணிக்கும் தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்தி சமிக்கைகளை துல்லியமாக பெற்று தகவலை பரிமாறும் வகையில் தொழிநுட்பங்களை புகுத்த வேண்டும். Advance Signaling System, Positive Train Control போன்ற தொழில்நுட்பம் மூலமாக இரயில்களை விரைந்து நிறுத்த உபயோகம் செய்யலாம். Train Collision Avoidance System என்ற தொழில்நுட்பம் மூலமாக (TCAS) ரேடார், சென்சார் ஒன்றை தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.
இவை இரயில் பாதையை கண்டறியும், அதன் வழித்தடத்தில் உள்ள தடைகளையும் கண்டறிந்து இரயில் ஓட்டுனர்களுக்கு சரியான சமிக்கைகளை வழங்கும். இதனால் விபத்து தவிர்க்கலாம், இரயில் முன்னதாகவே நிறுத்தப்படும். Automated Track Inspection (ATI) எனப்படும் தானியங்கு தடா ஆய்வுகளை அவ்வப்போது மேற்கொள்ள வேண்டும். தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமிராவுடன் கூடிய லேசர் தொழில்நுட்பங்களை உபயோகம் செய்தால் தடம்புரளும் வாய்ப்புள்ள விபத்தை கூட தவிர்க்கலாம்.