மே 13, புனே (Pune): இந்திய இரயில்வேயில் முக்கிய வருவாய் கோட்டமாக கவனிக்கப்படும் மத்திய இரயில்வே (Central Railway) பிரிவில், 19 துணை கோட்டங்கள் இருக்கின்றன. இந்திய ரயில்வேயில் 100% மின்வழித்தடத்திற்கு மாறிய பிரிவில் கவனிக்கப்படும் மத்திய இரயில்வேயில், பொதுவாக மழைகாலங்களில் தொழில்நுட்ப கோளாறுகளை அதிகாரிகள் எதிர்கொள்வது உண்டு. இதனிடையே, சமீபகாலமாக அவ்வப்போது சிக்னல் தொடர்பான கோளாறுகளை மத்திய இரயில்வே சந்தித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட மும்பை - தானே வழித்தடத்தில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக 51 புறநகர் இரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் புறநகர் இரயில்களை நம்பி பயணத்தை மேற்கொண்ட பலரும் அவதிக்குள்ளாகினர். பின் கோளாறு சரி செய்யப்பட்டு இரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன. Reels Video Tragedy: அதிவேகத்தில் காரில் உற்சாக பயணம்; ரீல்ஸ் வீடியோ எடுத்து நண்பர்கள் இருவர் பலி., 3 பேர் படுகாயம்.! 

சிக்னல் கோளாறால் இரயில் வழித்தடம் முற்றிலும் பாதிப்பு: இந்நிலையில், இன்று மத்திய இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, சிக்னல் கோளாறு காரணமாக தானே வழித்தடத்தில் உள்ள அனைத்து இரயில் பாதைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கல்யாண் முதல் குர்லா இரயில் நிலையம் வரை முற்றிலுமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதால், இரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வழித்தடத்தில் இயங்கும் மின்சார இரயில்கள் நடுவழியில் மற்றும் பிற இரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. இதுதொடர்பான கோளாறை விரைந்து சரிசெய்து இரயில் சேவையை தொடர தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் மத்திய இரயில்வே தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது. 73 ஆண்டுகால வரலாறு கொண்ட இவ்வழித்தடத்தில் சிக்னல் கோளாறு என்பது தொடருகிறது. இதனை விரைந்து சரி செய்ய அதிகாரிகள் உரிய நவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு ஆகும்.

மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.