மே 17, சென்னை (Technology News): இன்பினிக்ஸ் நிறுவனம் தனது Infinix GT 20 Pro ஸ்மார்ட் போனை வருகின்ற மே 21-ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய மிட் ரேஞ்சு பட்ஜெட்டில், 5G போனின் விலை ரூ.25,000-க்குள் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது Nothing Phone 2a, Poco X6 மற்றும் iQOO Z9 போன்ற ஸ்மார்ட் போன்களுக்கு போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. School Girl Sexual Harassment: சாலையில் தனியாக நடந்து சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை; மர்ம நபருக்கு காவல்துறை வலைவீச்சு..!
கடந்த ஏப்ரல் மாதம் இதுகுறித்த விவரங்கள் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இணையத்தில் பல தகவல்களை இதுபற்றி தெரிந்துகொள்ளலாம். புத்தம் புது MediaTek Dimensity 8200, Ultimate SoC Processor கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட் போன் ஆகும். இதுகுறித்த சில சிறப்பம்சங்களை இதில் பார்ப்போம்.
சிறப்பம்சங்கள்:
இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ, ஒரு சிறந்த சைபர் மெச்சா வடிவமைப்புடன் வருகின்றது. இது 8 விருப்ப வண்ணங்களில் பல்வேறு லைட்டிங் விளைவுகளுடன் LED பின்புறத்தை கொண்டுள்ளது. 108MP கொண்ட மூன்று பின்புற கேமரா மற்றும் 32MP செல்பி கேமரா அமைப்பு, 5,000mAh பேட்டரி திறன் கொண்ட 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 12GB வரை LPDDR5X ரேம் மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் வசதியுடன், 90FPS உயர் பிரேம் வீதம் மற்றும் SDR முதல் HDR போன்ற அம்சங்களுடன் பிரத்யேகமான Pixel works X5 Turbo டிஸ்ப்ளே கேமிங் சிப்பை கொண்டுள்ளது. அதிக நேரம் கேம் விளையாடுபவர்களுக்கு சிறந்ததாகும்.