HCL Tech (Photo Credit: @chandrarsrikant X)

ஜனவரி 07, மும்பை (Technology News): இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய நிறுவனமான ஹெச்சிஎல் டெக் (HCLTech) அதன் ஜூனியர் ஊழியர்களுக்கு சம்பள உயர்வை 1% முதல் 4% வரை ஊதிய உயர்வை (Salary Hike) அறிவித்துள்ளது. E0, E1 மற்றும் E2 நிலைகளில் உள்ள ஜூனியர் நிலை ஊழியர்களுக்கு 1-2% வரம்பில் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தில் சிறந்த செயல்திறன் கொண்டவர்கள் தோராயமாக 3-4% உயர்வு பெறுவர். Mutual Fund Exit Strategy: எப்போதெல்லாம் மியூச்சுவல் ஃபண்டை விட்டு வெளியேறலாம்? உங்களுக்கான டிப்ஸ் இதோ.!

சம்பள உயர்வு:

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், பெறப்பட்ட சம்பள உயர்வு சராசரியாக 7% என்ற கணிப்புகளை விட குறைவாக உள்ளது. மேலும், சிறந்த செயல்திறன் கொண்டவர்கள் 12-15% வரம்பில் அதிகரிப்புகளைப் பெறுவார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட புதிய ஊதிய உயர்வுகள் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் வெளியிடப்படுகின்றன. HCLTech-யின் ஜூனியர் நிலை ஊழியர்கள் E0, E1 மற்றும் E2 நிலைகள் 10 ஆண்டுகள் வரை அனுபவ நிலையில் உள்ளனர். நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்கள் E3 நிலை மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள். ஆனால், அவர்கள் இதுவரை எந்தவித சம்பள உயர்வுகளையும் பெறவில்லை.