ஜனவரி 07, சென்னை (Technology News): சேமிப்பைத் தாண்டி தற்போதுள்ள இளம் தலைமுறையினர், முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எதிர்கால நிதி தேவையறிந்து எதிலாவது முதலீடு செய்ய நினைக்கின்றனர். பங்கு சந்தைகள் பற்றி தெரியாதவர்களும் நிதி நிறுவனங்கள், வங்கிகள் மூலம் மியூச்சுவல் ஃபண்ட்டில் முதலீட்டை மேற்கொள்கின்றனர். ஆனால் முதலீடு செய்யும் பலருக்கும் அதிலிருந்து எப்போது எப்படி வெளிவர வேண்டும் எனத் தெரியாது. ஒரு சில சூழ்நிலைகள் ஏற்படும்போது அதிலிருந்து வெளிவர வேண்டும்.
பென்ச்மார்க்:
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் அனைத்துக்குமே பென்ச்மார்க் வருமானம் என்று ஓர் அளவுகோல் இருக்கிறது. இது முதலீடு செய்த பணத்திலிருந்து கிடைக்கும் வருமானம் கணக்கிடும் முறையாகும். இதன் அளவை வைத்து முதலீட்டிலிருந்து வெளிவர வேண்டும். அதாவது முதலீடு செய்த ஃபண்ட் அந்த முதலீட்டிற்கு நிர்ணயித்த அதன் பென்ச்மார்க் வருமான அளவு கோலைத் தாண்டி வருமானம் தரவில்லை எனில், அப்போது அந்த ஃபண்டிலிருந்து வெளியேறவோ அலல்து விற்கவோ செய்யலாம். கடந்த ஆண்டை வீட இந்த ஃபண்டின் வருமானம், பென்ச்மார்க் வருமானத்தை விட அதிகமாக இருந்தால் அதை தாராளமாக பின் தொடரலாம். அடுத்தாண்டில் அந்த ஃபண்டில் வருமான ஏற்றம் இல்லையெனில் அந்த ஃபண்டிலிருந்து வெளியேறுவது நல்லது. Union Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்: சாமானிய மக்களுக்கு ஜாக்பாட்.. முக்கிய திட்டங்கள் என்னென்ன இருக்கலாம்..!
நிறுவனங்களின் நிலை:
முதலீட்டை மேற்கொள்வதற்கு முன் முதலீடு செய்யப்போகும் நிறுவனங்களை பற்றி அறிந்து கொள்வது அவ்வளவு அவசியமோ அதைப் போலவே பண்டில் முதலிடும் தொகை வருமானமாகிறதா? அதன் வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். போர்ட்ஃபோலியோவில் நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்கள், பண்டின் ரிஸ்குகள், செலவு விகிதம் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். இவைகலை அடிப்படையாக அனைவரும் கவனிக்க வேண்டியை. இவைகளுடன் கூடுதலாக ஷார்ப் ரேஷியோ, ஆல்ஃபா, பீட்டா, ஸ்டாண்டர்டு டிவியேஷன் என சில நுணுக்கங்களை தெரிந்துகொள்ள வேண்டும். இவைகளின் சதவீதங்களைக் கவனித்து முதலீடு செய்ய வேண்டும்.
அவசர காலங்களில் நிதி:
உடனடி, எதிர்பாராத நிதித் தேவைகள் ஏற்படுமாயின் அப்போது மியூட்சுவல் ஃபணடை விட்டு வெளியேறலாம். அவசர காலத்தில் நிதித் தேவையை வைத்து கொண்டு வெளியில் அதிக வட்டிக்கு கடன்கள் வாங்க கூடாது. மேலும் அதிக வட்டிக்கு கடன்கள் வாங்குவது, முதலிடுவதற்கு எந்த விதத்திலும் பிரயோஜனம் இல்லை. அவசரக் காலத்தில் பயன்படாத எந்தவொரு முதலீடும் அனாவசியமற்றதே.
நிதி நிறுவனங்களின் செயல்பாடு:
மியூச்சுவல் ஃபண்டு மூலம் பிற நிறுவனங்களின் மேல் முதலிடும் போது போட்ஃபோலியோ, அந்த நிறுவனத்தின் நிதி நிலைகளை கண்காணிப்பது போன்றே மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனி மீதும் அவைகளின் நடவடிக்கைகளின் மீதும் கவனம் இருக்க வேண்டும். சரியான இடத்தில் தான் முதலீடு செய்கிறார்களா என தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அவரிகளிடம் அவ்வப்போது விளக்கமும் கேட்க வேண்டும். ஒரு வேளை அவைகளின் செயல்பாடுகள் உங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்றாலும், அளிக்கும் தொகையைக்கு சரியான விளக்கம் தரவில்லை என்றாலும், முதலீடு செய்வது லாபத்தை தரவில்லை என்றாலும் அந்த மியூச்சுவல் ஃபண்டிலிருந்து வெளியேற வேண்டும்.