![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/1720703494Lava%2520Blaze%2520X-380x214.jpg)
ஜூலை 11, சென்னை (Technology News): லாவா நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனை ரூ. 15 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. லாவா பிளேஸ் எக்ஸ் (Lava Blaze X 5G Smart Phone) என்ற புதிய ஸ்மார்ட்போனை ரூ. 15,000 பட்ஜெட் விலையில் வெளியிட்டுள்ளது. இந்த மொபைலில் பல அதிரடி அம்சங்கள் உள்ளது. இது ஸ்டார்லைட் பர்பில் மற்றும் டைட்டானியம் கிரே வண்ண விருப்பங்களில் கிடைக்கும். வருகின்ற ஜூலை 20-ஆம் தேதி அன்று மதியம் 12 மணி முதல் லாவாவின் அதிகாரப்பூர்வ தளம் மற்றும் அமேசான் ஆகியவற்றில் விற்பனை தொடங்குகிறது.
இந்த லாவா மொபைல் போனின் 4GB ரேம் மாறுபாட்டின் விலை ரூ.14,999. ஆனால் வங்கி சலுகைக்குப் பிறகு ரூ.13,999-க்கு கிடைக்கும். 6GB ரேம் மாறுபாட்டின் விலை ரூ. 15,999, வங்கி சலுகைக்குப் பிறகு, இந்த மாறுபாட்டின் விலை ரூ.14,999 ஆகும். 8GB ரேம் மாறுபாட்டின் விலை ரூ. 16,999. வங்கிச் சலுகைக்குப் பிறகு, ரூ.15,999-க்கு இந்த மாறுபாட்டைப் பெறலாம். மூன்று மாடல்களும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டிருக்கும். Young Woman Dies By Suicide: 'காதல்' என்ற பெயரில் தொந்தரவு செய்த வாலிபர்கள்; இளம்பெண் எடுத்த விவரீத முடிவு.. குடும்பத்தினர் சோகம்..!
சிறப்பம்சங்கள்:
இதில், 6.67-இன்ச் வளைந்த AMOLED டிஸ்ப்ளே 800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவுடன் உள்ளது. இந்த மொபைல் ஆனது வேகம் மற்றும் பல்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ப, போனில் MediaTek Dimensity 6300 செயலி கொடுக்கப்பட்டுள்ளது.
போனின் பின்புறத்தில் 64MP சோனி கேமரா சென்சார் மற்றும் 2MP மேக்ரோ கேமரா சென்சார் உள்ளது. செல்பிகளுக்கு 16MP முன் கேமரா சென்சார் கிடைக்கும்.
லாவா ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகின்றது. மேலும், இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் ஆதரிக்கிறது.
இந்த போன் புளூடூத், 5ஜி, ஓடிஜி மற்றும் டைப்-சி ஆகியவற்றை ஆதரிக்கிறது. தொலைபேசியில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. லாவா நிறுவனத்தின் இந்த சமீபத்திய ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14-யில் இயங்குகிறது.