
பிப்ரவரி 08, மைசூரு (Technology News): உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை உண்டாக்கிய கொரோனா பொது முடக்கத்திற்குப் பின், பணிநீக்கங்கள் (Layoffs) அதிகரித்து வருகின்றன. ஒரு சில முன்னணி நிறுவனங்கள் பணிநீக்கங்கள் செய்து வருகிறது. இதில், முக்கிய அம்சமாக ரோபா மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பங்கு வகிக்கிறது. RBI Monetary Policy: லோன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - ஆர்பிஐ கவர்னர் அதிரடி..!
பயிற்சி ஊழியர்கள் பணிநீக்கம்:
இந்நிலையில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் (Infosys), அதன் மைசூரு கிளையில் பணியாற்றி வரும் சுமார் 400 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவரும் கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பணியில் சேர்ந்தவர்கள் என்றும், ஒரு சில மாத பயிற்சிக் காலத்திலேயே இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அப்போது, சுமார் 700 பேர் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், நிறுவனத்தின் பயிற்சி முடிந்து, சில தொடர்ச்சியான உள்தேர்வுகளில், இவர்கள் தோல்வியடைந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் விளக்கம்:
இதுதொடர்பாக, இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ள அறிக்கையில், தேர்வில் தேர்ச்சி பெற விண்ணப்பதாரர்கள் 3 முறை முயற்சிப்பார்கள் என்றும், அதில் தோல்வியடைந்தால், அவர்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி நிறுவனத்தில் தொடர முடியாது. இது அவர்களின் ஒப்பந்தத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செயல்முறை 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. மேலும், எங்கள் ஊழியர்களுக்கு உயர்தர திறமை கிடைப்பதை உறுதி செய்கிறது எனத் தெரிவித்துள்ளது.