டிசம்பர் 07, சென்னை (Technology News): மெட்டா (Meta Platforms) நிறுவனத்தில் ஒன்றாக இருக்கும் வாட்சப் நிறுவனம், தனது பயனர்களின் வசதிக்காக புதிய அம்சங்களை வழங்கி வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்ட வாட்சப், 2010 க்கு பின்னர் உலகளவு மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்து. இன்று குறுஞ்செய்திகளை எழுத்துக்கள், வீடியோ, உள்ளெடுக்கள் என பலதரப்பட்ட வகையில் அனுப்பவும், தனிநபரின் தகவல் பாதுகாப்புக்கும் பிரதான, பாதுகாப்புத்தன்மை கொண்ட செயலியாக இருக்கிறது. ISRO PROBA-3 Launch: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி59 ராக்கெட்..!
3 புள்ளிகளுடன் அலைவரிசை ஓட்டம்:
இதனிடையே, வாட்சப் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை வழங்கி இருக்கிறது. அதன்படி, பேஸ்புக் மெசெஞ்சரில் வருவதுபோல, வாட்ஸப்பிலும் எதிர்முனையில் இருக்கும் பயனர், டைப்பிங் செய்யும்போது, 3 புள்ளிகளுடன் அலைவரிசை ஓடுவது போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ரியல்டைம் அனுபவம்:
இருவரும் ஒரே நேரத்தில் ஆன்லைனில் இருக்கும்போது, பயனர் வாட்சப்பில் சேட்டிங் (WhatsApp Chating) செய்கையில் இந்த அனுபவத்தை பெறலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனாளர்களுக்கு இவ்வசதியை பெற இயலும். சாட்டிங் செய்யும்போது பயனர்களுக்கு ரியல்டைம் எனப்படும் நேரடி விவாதத்தை ஊக்குவிக்கவும், அவர்களை அப்படியே நிலைநிறுத்தி வைக்கவும் இம்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அப்டேட் செய்யாதவர்களுக்கு, வாட்சப் அப்டேட் ஆனதும் இவ்வசதி கிடைக்கும்.