WhatsApp Update (Photo Credit:: WhatsApp / Wikipedia Commons)

பிப்ரவரி 25, சென்னை (Technology News): உலகளவில் அதிக பயனாளர்களைக் கொண்ட வாட்ஸ் ஆப் செயலியை, பேஸ்புக் நிறுவனர் மார்க் வாங்கியது முதல் அதில் பல புதிய வசதிகளை ஒன்றன் பின் ஒன்றாக அறிமுகப்படுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பயனாளர்கள் பெரிதும் எதிர்பார்த்த Chat Lock என்கிற வசதியினை அறிமுகப்படுத்தியிருக்கிறது வாட்ஸ் அப் நிறுவனம். இது பயனாளர்களின் Chat -களின் பாதுகாப்பை அதிகப்படுத்துவதாக உள்ளது. வாட்ஸ் அப் பயனாளர்கள் தங்களின் தனிப்பட்ட ஒருவரின் Chat அல்லது குழு மேசேஜ்களை தனியாக லாக் செய்யும் வசதி வரவுள்ளது. Save Energy: நீங்கள் உங்கள் வீட்டின் கரண்ட் செலவை குறைக்க வழிகளை தேடுகிறீர்களா..? மின்சாரத்தை சேமிக்க எளிய வழிகள்..!

வாட்ஸ் அப் டிப்ஸ்:

ஹைட் செய்ய நினைக்கும் நபரின் வாட்ஸ் அப் பக்கத்திற்கு சென்று view contact -ள் சென்று அதில் இறுதி ஆப்ஷனாக இருக்கும் chat lock என்றிருப்பதை க்ளிக் செய்ய வேண்டும். அதில் பாஸ்வேர்ட், கைரேகை ஆப்ஷன் கேட்கும் அதை தேர்வு செய்து கொடுத்துவிட்டால், அந்நபரின் chat தனியாக மறைந்துவிடும். இந்த chat -ஐ திருப்ப பெற archive chats check செய்வதை போன்று செக் செய்து கொள்ளலாம். இதே போல் குழுவின் chat -யும் ஹைய்ய முடியும். இது நோட்டிஃபிகேஷன் வந்தாலும் காட்டாது. இந்த வசதி whatsapp beta பயனர்களுக்கு தரப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷன் whatsapp பயனர்களிடையே நல்ல வரவேற்ப்பு பெற்றுள்ளது.