Microsoft Logo (Photo Credit: Wikipedia)

மே 14, சென்னை (Technology News): உலகின் முன்னணி பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் (Microsoft), உலகளவில் சுமார் 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த பணிநீக்கத்தால் நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கையில் 3% பேரை வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த பணிநீக்கம் லிங்க்டின் (LinkedIn) ஊழியர்களுக்கும் பொருந்தும் என குறிப்பிட்டுள்ளது. பணிநீக்கத்திற்கான முக்கிய காரணமாக அதிகரித்து வரும் சந்தை போட்டித்தன்மை, செலவுகளை குறைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என நிறுவனம் கூறியுள்ளது. Airtel Service: ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பு.. பயனர்கள் அவதி.!!

மைக்ரோசாஃப்ட் பணிநீக்கம்:

கடந்த 2023ஆம் ஜனவரி மாதம் சுமார் 10,000 ஊழியர்களை ஹோலோலென்ஸ், அதன் ஆக்மென்டட் ரியாலிட்டி ஹெட்செட் மற்றும் பிற பிரிவுகளில் பணிபுரியும் குழுக்களைச் சேர்ந்த பணியாளர்களை பணிநீக்கம் (Layoff) செய்தது. தற்போது, செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பு மற்றும் கிளவுட் சேவைகளுக்கான செலவினங்கள் அதிகரித்து வரும் நிலையில் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. மைக்ரோசாஃப்ட் மட்டுமின்றி உலகின் முன்னணி பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.