
மே 13, சென்னை (Technology News ): தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் மக்களின் தேவைக்காக ஏர்டெல், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட மொபைல் சேவைகளை உபயோகித்து வருகின்றனர். தங்களது அத்தியாவசிய தேவைக்காகவும், அன்றாட வேலைக்காகவும் மக்கள் உபயோகித்து வரும் மொபைல் சேவைகள் சில சமயங்களில் சேவை பாதிப்படைவதால் பலரும் அவதியடைகின்றனர்.
வாடிக்கையாளர்கள் இணையத்தில் புகார் :
அந்த வகையில் தற்போது சென்னை, மதுரை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஏர்டெல் மொபைல் சேவை பாதிப்பானது ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். ஏர்டெல் சேவை முடக்கப்பட்டுள்ளதா? என்ன பிரச்சனை? எனவும் சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். Amazon Prime: அமேசான் பிரைம் வச்சிருக்கீங்களா? வச்சான் பாரு ஆப்பு.. என்ன தெரியுமா?
ஏர்டெல் நிறுவனத்தில் சேவை பாதிப்பு :
மேலும் ஏர்டெல் நிறுவனத்தை டேக் செய்து தங்களது புகார்களை பதிவு செய்து வருகின்றனர். ஏர்டெல் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு நிகர லாபம் சரிந்துள்ளதாக முன்னதாக அந்நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பயனர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.