Microsoft Reveals AI Impact Job List (Photo Credit : @qz / @rickspairdigi X)

ஜூலை 31, வாஷிங்டன் டிசி (Technology News): செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் (AI Technology) தற்போது உலக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டு பலரின் வேலைகளுக்கு ஆப்பு வைக்கிறது. தொழில் நிறுவனங்களை பொறுத்தவரையில் மிகப்பெரிய அளவிலான தொழிலாளர்கள் பிரச்சனையை சில நிமிடங்களில் தீர்த்து வைப்பதால் அதனை பலரும் தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சார்பில் அமல்படுத்தப்பட்டுள்ள கோபைலட் (Copilot) எனப்படும் ஏஐ தற்போது வரை 2 லட்சத்துக்கும் அதிகமான நபர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஏஐ தொழில்நுட்பத்தால் கேள்விக்குறியாகும் வேலைகள் :

விரைவில் கோபைலட் அறிமுகம் செய்யப்பட்டு அது தொடர்ந்து பயன்படுத்தப்படும் பட்சத்தில் எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், வாடிக்கையாளர் சேவை பணிகளில் அதிகம் ஈடுபடுத்தப்படும் என்பதும், இதனால் அங்கு வேலை பார்த்து வரும் நபர்களின் வேலை கேள்விக்குறியாவதாகவும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. மேலும் எந்தெந்த துறைகளில் கோபைலட் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது எனவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் ஒரு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தகவல் தற்போது வெளியாகி மிகப்பெரிய அளவிலான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிர்ச்சி தகவல் :

அதன்படி கோபைலட் ஏஐ மூலமாக சுமார் 40க்கும் மேற்பட்ட வேலைகள் நேரடியாக பாதிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமானவரால் பயன்படுத்தப்பட்ட கோபைலட் மூலமாக ஆய்வுகள் செய்யப்பட்டு தற்போது இந்த தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சுமார் 40 வேலைகள் கோபைலட் சாட்பாட் தொழில்நுட்பம் கொண்டு செய்யப்படுவதால் அந்த வேலைகளில் எதிர்காலத்தில் மாற்றங்கள் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எளிமையான சொற்றொடர்களை உருவாக்கும் ஏஐ கருவிகள் மறுசீரமைப்பு நடவடிக்கையாகவும் பல நிறுவனங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கீழ்காணும் வேலைகளில் ஏஐ தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும் வேலைகள் :

  • மொழிபெயர்ப்பாளர்கள் / உரைபெயர்பாளர்கள்
  • வரலாற்று ஆசிரியர்கள்
  • பயணிகள் உதவியாளர்கள்
  • விற்பனை பிரதிநிதிகள்
  • எழுத்தாளர்கள்
  • வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகள்
  • CNC கருவி புரோகிராமர்கள்
  • தொலைபேசி ஆப்பரேட்டர்கள்
  • டிக்கெட் முகவர்கள்
  • வானொலி டி.ஜேக்கள் மற்றும் ஒளிபரப்பு அறிவிப்பாளர்கள்

மேற்கூறிய வேலைகளில் பயனர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வது, உள்ளடக்கத்தை உருவாக்குவது, தகவல்களை சுருக்கமாக கூறுவது, கேள்விகளுக்கு பதில் அளிப்பது ஆகிய விஷயங்களில் கோபைலட் சிறப்பாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவை தவிர்த்து கட்டாய உடல் உழைப்பு தேவைப்படும் இடத்தில் ஏஐ-ன் தாக்கம் பெரிதளவில் வெளிப்படவில்லை. அதேபோல உடல் ரீதியான உழைப்பு, உணர்வுபூர்வமான விஷயங்களுக்கு ஏஐ தற்போது தயாராக இல்லை என்பதால் அந்த வேலைகளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. NISAR Satellite: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது நிசார் செயற்கைகோள்.. இந்தியாவிற்கே பெருமை.. ஜெய் ஹிந்த்! 

செயற்கை நுண்ணறிவு ஏஐ தொழில்நுட்பத்தால் குறைவாக பாதிக்கப்படும் வேலைகள் :

  • அகழிகள் தோன்றும் இயந்திரங்கள்
  • பாலம் கட்டும் பணிகள்
  • வீட்டு பணிப்பெண்கள்
  • பராமரிப்பு துறைகள்
  • வர்ணம் பூசும் தொழில்
  • கூரை பணிகள்
  • மசாஜ் சென்டர்
  • நெடுஞ்சாலை பராமரிப்பு தொழிலாளர்கள்
  • நர்சிங் உதவியாளர்கள்
  • மருத்துவ வல்லுநர்கள்

மேற்குறிப்பிட்ட பணிகளில் ஏஐ பெரிதளவும் பயன்படுத்தப்படுவதில்லை. இங்கு நேரடி உணர்வு, உழைப்பு அவசியமாகிறது என்பதால் அங்கு ஏஐ-க்கு வேலையில்லை. அதே நேரத்தில் கீழ்காணும் 40 வேலைகள் சேட்ஜிபிடி மற்றும் மைக்ரோசாப்டின் கோபைலட் போன்ற செயல்களால் விரைவில் நிரப்பப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. அதே வேளையில் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் முன்னேறினால் உடல் உழைப்பு சம்பந்தப்பட்ட வேலைகளுக்கும் ஆப்பு வைக்கக்கூடும் என கூறப்படுகிறது.

ஏஐ தொழில்நுட்பத்தால் அதிகம் பாதிக்கப்படும் 40 வேலைகளின் லிஸ்ட் :

  • மொழிபெயர்ப்பாளர்கள்
  • வரலாற்று ஆசிரியர்கள்
  • சமூக அறிவியல் ஆராய்ச்சி உதவியாளர்கள்
  • சமூகவியலாளர்கள்
  • அரசியல் கணிப்பாளர்கள்
  • மத்தியஸ்தர்கள்
  • மக்கள் தொடர்பு நிபுணர்கள்
  • தொகுப்பாளர்கள்
  • மருத்துவ தரவு மேலாளர்கள்
  • பத்திரிகையாளர்கள் / நிரூபர்கள்
  • தொழில்நுட்ப எழுத்தாளர்கள்
  • நகல் எழுத்தாளர்கள்
  • பிழை திருத்துவோர்
  • கடித எழுத்தாளர்கள்
  • நீதிமன்ற நிரூபர்கள்
  • எழுத்தாளர்கள் / ஆசிரியர்கள்
  • உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் /மொழி கற்றல் திறன் ஆசிரியர்கள்
  • மனநல ஆலோசனை பணியாளர்கள்
  • கடல் ஆலோசகர்கள்
  • வரி தயாரிப்பாளர்கள்
  • சட்ட உதவியாளர்கள்
  • துணை வழக்கறிஞர்கள்
  • சட்ட செயலாளர்கள்
  • தலைப்பு ஆய்வாளர்கள்
  • இழப்பீடு, சலுகை, பகுப்பாய்வு நிபுணர்கள்
  • சந்தை ஆராய்ச்சி ஆய்வாளர்கள்
  • நிதி திரட்டுவோர்
  • மனித வள மேம்பாட்டு அதிகாரிகள்
  • வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகள்
  • விற்பனை சேவை பிரதிநிதிகள்
  • காப்பீடு ஒப்பந்ததாரர்கள்
  • புலனாய்வாளர்கள்
  • கடன் அதிகாரிகள்
  • நிதி ஆய்வாளர்கள்
  • பட்ஜெட் அதிகாரிகள்
  • பயிற்சி மற்றும் மேம்பாட்டு நிபுணர்கள்
  • கணினி அமைப்பு அதிகாரிகள்
  • தரவு விஞ்ஞானிகள் (Data Scientist)
  • பயண முகவர்கள்
  • கட்டிடக்கலைஞர்கள்

ஏஐ தொழில்நுட்பத்தால் குறைவாக பாதிக்கப்படும் 40 வேலைகளின் லிஸ்ட் :

  • அகழி தோண்டும் பணியாளர்கள்
  • பாலம் கட்டும் பணிகள்
  • பம்ப் ஆபரேட்டர்கள்
  • குளிர்சாதன பொருட்கள் தயாரிப்பு பணியாளர்கள்
  • மின் விநியோகஸ்தர்கள்
  • நீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணியாளர்கள்
  • கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை பணியாளர்கள்
  • இயந்திரத்தின் ஆபரேட்டர்கள்
  • கூரைகள் தயாரிப்பு பணியாளர்கள்
  • கன்கிரீட் பினிஷர்கள்
  • உபகரண ஆபரேட்டர்கள்
  • கட்டிங் மெஷின் ஆபரேட்டர்கள்
  • சுரங்க இயந்திர ஆபரேட்டர்கள்
  • கட்டுமான தொழிலாளர்கள்
  • இரும்பு கம்பி தொழிலாளர்கள்
  • டைல்ஸ் தொழிலாளர்கள்
  • இரும்பு மற்றும் ரீபர் வலுவூட்டும் தொழிலாளர்கள்
  • குழாய் அடுக்கு தொழிலாளர்கள்
  • ஆபத்தான பொருட்கள் அகற்றும் தொழிலாளர்கள்
  • செப்டிக் டேங்க் தொழிலாளர்கள்
  • டயர் தயாரிக்கும் தொழிலாளர்கள்
  • வேலி தயாரிப்பவர்கள்
  • எண்ணெய் நிறுவன பணியாளர்கள்
  • எரிவாயு நிறுவன பணியாளர்கள்
  • உலை, சூளை, அடுப்பு ஆபரேட்டர்கள்
  • கட்டுமான மறுசீரமைப்பு தொழிலாளர்கள்
  • இரும்பு மற்றும் எஃகு தொழிலாளர்கள்
  • ஆபத்தான கழிவு அகற்றும் பணியாளர்கள்
  • இரத்த சேகரிப்பு நிபுணர்
  • பிணவறை பணியாளர்கள்
  • மசாஜ் செய்பவர்கள்
  • உடற்கல்வி சிகிச்சை உதவியாளர்கள்
  • தீயணைப்பு மேற்பார்வையாளர்கள்
  • கட்டுமான மேற்பார்வையாளர்கள்
  • அகழ்வாராய்ச்சி ஆபரேட்டர்கள்
  • துளையிடும் இயந்திர ஆபரேட்டர்கள்
  • லிப்ட் ஆபரேட்டர்கள்
  • தொழில்துறை லாரி மற்றும் டிராக்டர் ஆபரேட்டர்கள்
  • துப்புரவாளர்கள்
  • பணிப்பெண்கள் மற்றும் வீட்டு பராமரிப்பு துப்புரவாளர்கள்

இது போன்ற வேலைகளில் ஏஐ தலையீடு என்பது மிகக்குறைந்த அளவில் இருக்கிறது. ஏஐ பணிகளை மனிதர்கள் திறம்பட செய்யும் பட்சத்தில் அதன் வரம்புகளை புரிந்து கொண்டு உள்ளடக்கங்களை சரிபார்க்க தெரியும்பட்சத்தில் அந்தப் பணியில் இருப்பவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

AI தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படக்கூடிய வேலைகள் குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள லிஸ்ட் :