ஜூலை 30, ஸ்ரீஹரிகோட்டா (Technology News): இந்திய விண்வெளி ஆராய்ச்சி (ISRO) நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் (NASA) முதன்முறையாக செயற்கை துளை ரேடார் (நிசார்) உருவாக்கியது. இந்த செயற்கைக்கோள் இன்று ஜூலை 30 ஆம் தேதி மாலை 05:40 மணியளவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. எஃப்-16 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது என முன்னதாகவே தெரிவித்திருந்தனர். கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. எச்சரிக்கை விடுத்ததா இயற்கை?.. காத்திருக்கும் பேரழிவு..!
நிசார் செயற்கைக்கோளின் சிறப்புகள் (Nisar Satellite Specifications) :
அதன்படி ராக்கெட்டுக்கு எரிபொருள் நிரப்பும் பணி முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நிறைவு பெற்று நேற்று பகல் 02:10 மணிக்கு கவுண்டனும் தொடங்கியது. நிசார் (Nisar Satellite) எனும் இந்த செயற்கைக்கோள் சுமார் 2,392 கிலோ எடை கொண்ட, பூமியின் தனித்துவமான கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் நாசாவின் எல்-பாண்ட் மற்றும் இஸ்ரோவின் எஸ்-பாண்ட் என்ற இரட்டை அதிர்வெண் வகையை சேர்ந்த முதல் செயற்கை கோளாகும். நிசார் செயற்கைக்கோள் மூலமாக பூமியின் மேற்பரப்பில் உண்டாகும் சிறு சிறு மாற்றங்களை கண்டறிவதுடன் பகல், இரவு, வானிலை தரவுகளையும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நிசார் செயற்கைக்கோள் (Nisar Satellite Launched) :
இவற்றில் தாவர இயக்கவியல், கடலில் ஏற்படும் பனியின் வகைகள், கப்பல்களை கண்டறிதல், புயலின் தன்மை, மண்ணின் ஈரப்பதம் மற்றும் அதில் ஏற்படும் மாற்றங்கள், நீர் வளங்கள் உள்ளிட்ட விஷயங்களும் அடங்கும். இந்த செயற்கைக்கோளை நாசா விஞ்ஞானிகள் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் பூமியின் மாற்றத்தை கண்காணிக்க பயன்படுத்துகின்றனர். இந்த செயற்கைக்கோள் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் பூமியிலிருந்து 743 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அதன்படி இஸ்ரோ - நாசா இணைந்து தயாரித்த "நிசார்" செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.