
ஜூலை 02, சென்னை (Technology News): நத்திங் நிறுவனத்தின் புதிய நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் (Nothing Phone 3 Smartphone) நேற்று (ஜூலை 02) இந்தியாவில் அறிமுகமானது. இந்த மாடல் 2 ஸ்டோரேஜ் வேரியண்ட்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனின் விலை, அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் காண்போம். Airtel & Jio Recharge: ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் ஏர்டெல், ஜியோ?.. அதிர்ச்சியில் பயனர்கள்.!
நத்திங் போன் 3 விலை (Nothing Phone 3 Price):
- 12ஜிபி ரேம் + 256ஜிபி ரோம் - ரூ.79,999. பேங்க் ஆப்பர் மற்றும் எக்ஸ்சேஞ் ஆப்பர் உடன் ரூ.62,999 என்ற ஆப்பர் விலையில் வாங்கலாம்.
- 16ஜிபி ரேம் + 512ஜிபி ரோம் - ரூ.89,999. பேங்க் ஆப்பர் மற்றும் எக்ஸ்சேஞ் ஆப்பர் உடன் ரூ.72,999 என்ற விலையிலும் வாங்கலாம்.
முன்பதிவு மற்றும் விற்பனை சலுகைகள் (Nothing Phone 3 Offers):
முன்பதிவு நேற்று (ஜூலை 01) முதல் தொடங்கியது. சிறப்பு அறிமுகச் சலுகையாக, முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் நத்திங் போன் 3 உடன் ரூ.14,999 மதிப்புள்ள நத்திங் இயர்-ஐ இலவசமாக பெறலாம். மேலும், ஜூலை 15ஆம் தேதிக்குள் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யும் அல்லது ஸ்மார்ட்போனை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 1 வருட நீட்டிக்கப்பட்ட வாரண்டி கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னணி வங்கிகளில் 24 மாதங்கள் வரை நோ காஸ்ட் இஎம்ஐ (No Cost EMI) கிடைக்கும்.
நத்திங் போன் 3 சிறப்பம்சங்கள் (Nothing Phone 3 Specifications):
- இதில், 6.67-இன்ச் பிளெக்சிபில் AMOLED டிஸ்பிளே உடன், 1.5K ரெசல்யூஷன், 4500 நிட்ஸ் மற்றும் 1600 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 1000 ஹெர்ட்ஸ் டச் சம்ப்ளிங், 2160 ஹெர்ட்ஸ் டிம்மிங் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.
- சிப்செட்டை பொறுத்தவரை, ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 உடன் குவால்காம்-ன் கிரியோ CPU கட்டமைப்பு மற்றும் அதிநவீன குவால்காம் அட்ரினோ ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மல்டி டாஸ்கிங் முதல் மிக மென்மையான மொபைல் கேமிங் வரை நன்றாக இருக்கும்.
- இதில், ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50எம்பி ஓஐஎஸ் ப்ரைமரி கேமரா + 50எம்பி ஓஐஎஸ் பெரிஸ்கோப் கேமரா + 50எம்பி அல்ட்ரா-வைட் கேமரா உள்ளது. செல்பி கேமரா 50எம்பி கொடுக்கப்பட்டுள்ளது.
- பேட்டரியை பொறுத்தவரை, இதுவரை இல்லாத மிகப்பெரிய 5500mAh சிலிக்கான் கார்பன் செல் பேக் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் 65W பாஸ்ட் வயர்டு சார்ஜிங் மூலம், 54 நிமிடங்களில் 100% சார்ஜ் ஆகும். மேலும், 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது.
- இதில் முக்கியமாக, ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஒரு மைக்ரோ-எல்இடி டிஸ்பிளே உள்ளது. அது கிளிப் மேட்ரிக்ஸ் (Glyph Matrix) என்று அழைக்கப்படுகிறது. இது IP68 ரேட்டிங் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 5 ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 7 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.