Jio / Airtel (Photo Credit : @Mysterydealz X)

ஜூன் 30, புதுடெல்லி (Technology News): இந்தியாவில் உள்ள மொபைல் நெட்வொர்க்கில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டு போட்டித்தன்மையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 5G ஃபைபர், 5G மோடம் என தங்களது சேவையை தொடர்ந்து மக்களுக்கு விரிவுபடுத்தும் போட்டியில் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் முன்னிலை பெற்றுள்ளன. இதனிடையே வரும் ஜூலை - ஆகஸ்ட் மாதம் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் தங்களது தொலைதொடர்பு சேவைக்கான கட்டணத்தை உயர்த்தி அறிவிக்ககூடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. Microsoft Layoffs: 2000 பேரின் வேலைக்கு ஆப்பு.. மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் பணிநீக்கம்?.! 

விரைவில் கட்டண உயர்வு :

குறைந்த அளவிலான போட்டி மற்றும் TRAI தலையீடு இல்லாதது போன்ற விஷயங்களால் இந்த நிறுவனங்கள் தற்போது வருவாயை அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. பிஎஸ்என்எல் நிறுவனம் ஆரம்பத்தில் பயனர்களின் எண்ணிக்கையை அதிகம் கொண்டிருந்தாலும், ஒரு சில இடங்களில் சேவை குறைபாடு காரணமாக அதன் வாடிக்கையாளர்களை இழந்தது. இந்நிலையில் ஏர்டெல், ஜியோ சப்ஸ்கிரைப்ர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் விரைவில் கட்டண உயர்வும் இருக்கலாம் என கூறப்படுகிறது.

அதிர்ச்சியில் பயனர்கள் :

சமீப காலமாக ஏர்டெல் மற்றும் ஜியோ நெட்வொர்க் டவுன் காரணமாக பல இன்னல்களை சந்தித்த பயனர்கள், தற்போது மீண்டும் எப்பொழுதும் போல இணைய சேவையை உபயோகித்து வருகின்றனர். சில கிராம பகுதிகளில் தற்போது வரை நெட்வொர்க் பிரச்சனை இருந்து வருகிறது. இதுகுறித்து முறையிட்ட போதும் 15 நாட்களில் சரியாகிவிடும் என்று வாக்குறுதி அளித்து மீண்டும் பிரச்சனை தொடர்வதாக எக்ஸ் தளத்தில் பயனர்கள் குமுறினர். இந்த நேரத்தில் ரீசார்ஜ் கட்டணங்கள் உயரும் என்ற தகவல் வெளியாகி பயனர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.