மார்ச் 1, சென்னை (Chennai): மில்லட் வகையைச் சேர்ந்த அரசி வகை இது. சாதாரண அரிசி போலே இதிலும் புலாவ், பொங்கல், வெரைட்டி ரைஸ் எல்லாம் செய்யலாம். உடலுக்கு ஆரோக்கியமானது. தற்போது இந்த சாமை அரிசி கொண்டு தயிர் சாதம் எப்படி செய்வது என்று இந்த பதிவில் நாம் காணலாம்.
தேவையான பொருட்கள்:
சாமை அரிசி - 1 கப்
உப்பு - 1 / 4 தேக்கரண்டி
பெருங்காயம் - 1 சிட்டிகை
முந்திரி- 4
தயிர் - 5 தேக்கரண்டி
கடுகு - 1 / 4 தேக்கரண்டி
கருவேப்பிலை - 10 இலைகள்
மிளகாய் - 1
எண்ணெய் - 1/2 தேக்கரண்டி
மாதுளை முத்துக்கள் - 1 தேக்கரண்டி Cooking Gas Cylinder Price Hiked: சிலிண்டர் விலை கடும் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!
செய்முறை: ஒரு கப் சாமை அரிசியை எடுத்து நன்றாக கழுவி மூன்று கப் அளவு தண்ணீர் சேர்த்து குழைய வேக வைத்துக் கொள்ளவும். சாதத்துடன் தயிரும் உப்பும் சேர்த்து கலந்த பின்னர் அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, மாதுளை முத்துக்களை சேர்த்து கலந்து விடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பெருங்காயம், முந்திரி, கருவேப்பிலை தாளித்து தயிர்சாதத்துடன் சேர்க்கவும். இப்போது சுவையான ஆரோக்கியமான சாமை தயிர் சாதம் தயார்.