டிசம்பர் 12, டெல்லி (Delhi): சீன நிறுவனமான ஒன்பிளஸ் அதன் பிளாக்ஷீப் பிரீமியம் ஸ்மார்ட்போனை சீனாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. தற்போது அதே மொபைல் போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதுதான் ஒன்பிளஸ் 12 (OnePlus 12).
ஒன்பிளஸ் 12 விலை: தற்போது இந்த மொபைல் ஆனது 4299 யுவான் விலையில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் சீனாவில் விற்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இதன் விலை ருபாய் 50, 700 ஆக இருக்கும். மேலும் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் 56 ஆயிரம் ரூபாய்க்கும் 16 ஜிபி ரேம் மற்றும் ஒரு டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் 62,000 ரூபாய்க்கும் சீனாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. Instagram Famous Died: 19 வயதில் இப்படி நடக்கணுமா?.. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த 2 நாளில் இன்ஸ்டாகிராம் பெண் பிரபலம் மரணம்.!
ஒன்பிளஸ் 12 சிறப்பம்சங்கள்: இந்த மொபைல் ஆனது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான கலர் ஒஎஸ் 14 கொண்டு இயங்குகிறது. டிஸ்ப்ளே ஆனது 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் கொண்டது. மேலும் இதன் டிஸ்ப்ளே ஆனது A+ சான்றிதழை பெற்றுள்ளது. மேலும் 5400 mAh பேட்டரி பேக் வசதியினை கொண்டது. அதுமட்டுமின்றி 3x பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா உடன் 64 மெகாபிக்சல் மற்றும் 48 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் பிரண்ட் கேமரா 32 எம்பி யுடன் உள்ளது. பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட இந்த மொபைல் ஆனது அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.