மே 04, சென்னை (Technology News): ஒன்பிளஸ் நிறுவனம் Ace தொடரில் ஒன்பிளஸ் ஏஸ் 3 ஃப்ரோ (OnePlus Ace 3 Pro) என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது. வருகின்ற ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வரவாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இந்நிலையில், மொபைலின் அனைத்து முக்கிய விவரங்கள் பற்றிய தொகுப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இதில் 5,800mAh பேட்டரி திறன், 16GB ரேம், 50MP கேமரா மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன் இந்த ஸ்மார்ட் போன் களமிறங்கவுள்ளது. மேலும், பல சிறப்பம்சங்கள் பற்றி இதில் பார்ப்போம். Young Woman Poured Petrol And Set Herself On Fire: இன்ஸ்டாகிராம் பழக்கம்; கள்ளக்காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு - இளம்பெண் தீக்குளிப்பு..!
இதில் சமீபத்திய ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ColorOS 14 அடிப்படையாக வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், 6.78 இன்ச் 8T BOE LTPO Curved edge திரை மற்றும் அதன் Ace 3 Pro சாதனத்தில் Qualcomm வேகமான சிப்செட் Snapdragon 8 Gen 3 பயன்படுத்தப்பட்டுள்ளது. ஃபோனில் 16ஜிபி வரை LPDDR5x ரேம் மற்றும் 1TB UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் தொழில்நுட்ப வசதியுடன், தொலைபேசியின் முதன்மை கேமரா 50MP (OIS) பின்புற கேமரா மற்றும் 16MP செல்பி கேமரா ஆகிய அம்சங்களுடன் உள்ளது. இவை அனைத்தையும் விட மிக முக்கியமாக இதில், 5800mAh பேட்டரி திறனுடன், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன் இது கொடுக்கப்பட்டுள்ளது.