OPPO Reno14 5G (Photo Credit: @chehonz201 X)

ஜூலை 03, சென்னை (Technology News): ஓப்போ நிறுவனம் புதிய ஓப்போ ரெனோ14 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று (ஜூலை 03) அறிமுகம் செய்துள்ளது. IP68 & IP69 ரேட்டிங், 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி போன்ற சிறப்பம்சங்களுடன் ஓப்போ ரெனோ14 5ஜி (OPPO Reno14) ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து இப்பதிவில் காண்போம். Nothing Phone 3: அசத்தலான அம்சங்களுடன் நத்திங் போன் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.. முழு விவரம் உள்ளே..!

ஓப்போ ரெனோ14 5ஜி விலை (OPPO Reno14 5G Price):

8ஜிபி ரேம் + 256ஜிபி ரோம் - ரூ.37,999

12ஜிபி ரேம் + 256ஜிபி ரோம் - ரூ.39,999

12ஜிபி ரேம் + 512ஜிபி ரோம் - ரூ.42,999

விற்பனை விவரம்:

ஜூலை 08ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும். பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஓப்போ ஸ்டோர் (OPPO Store) ஆகிய தளங்களில் கிடைக்கும். 10% கேஷ்பேக் உடன் விற்பனைக்கு வருகிறது. ஓபல் ஒயிட் (Opal White), லூமினஸ் கிரீன் (Luminous Green) ஆகிய இரு கலர்களில் கிடைக்கும்.

ஓப்போ ரெனோ14 5ஜி சிறப்பம்சங்கள் (OPPO Reno14 5G Specifications):

  • இதில், 6.59 இன்ச் அமோல்டு டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 240Hz டச் சாம்பிளிங் ரேட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.
  • பிராசஸ்சரை பொறுத்தவரை, மீடியாடெக் டைமன்சிட்டி 8350 (MediaTek Dimensity 8350) சிப்செட் உடன், கலர்ஓஎஸ் 15.0 ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் உள்ளது.
  • இதில், 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. செல்பி கேமரா 50எம்பி உள்ளது.
  • ஏஐ அம்சங்களை பொறுத்தவரை, ஏஐ எடிட்டர் 2.0, ஏஐ ரீகம்போஸ், ஏஐ பர்ஃபெக்ட் ஷாட், ஏஐ ஸ்டூடியோ போன்ற அம்சங்கள் கிடைக்கின்றன. மேலும், ஏஐ ஃபிளாஷ் லைவ்போட்டோ, ஏஐ லைவ் போட்டோ எக்ஸ்போர்ட் போன்ற சிறப்பம்சங்களும் உள்ளன.
  • இந்த ஸ்மார்ட்போனில், ஏரோஸ்போஸ் கிரேட் அலுமினியம் ஃபிரேம் கொடுக்கப்பட்டுள்ளது. IP68 & IP69 ரேட்டிங் உடன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 6000mAh பேட்டரி கொண்ட 80W சூப்பர்வூக் ஃபிளாஷ் சார்ஜிங் வசதியுடன் உள்ளது.