Poco M6 Plus 5G (Photo Credit: @RealSufiyanKhan X)

ஆகஸ்ட் 06, சென்னை (Technology News): போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ M6 பிளஸ் 5G ஸ்மார்ட் போனை (POCO M6 Plus 5G Smart Phone) கடந்த ஆகஸ்ட் 01-ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. மலிவான விலையில் அதிக செயல்திறன் கொண்ட போனை எதிர்பார்ப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த ஸ்மார்ட் போனாக இருக்கும்.

விலை:

போக்கோ M6 பிளஸ் 5G-யின் தொடக்க விலையாக ரூ.11,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, குறைந்த விலையில் ஒரு சிறந்த ஸ்மார்ட் போனாக உள்ளது. இதன் விற்பனை பிளிப்கார்ட்டில் இன்றிலிருந்து (ஆகஸ்ட் 06) நடைபெற்று வருகிறது. Investment Ideas: முதலீடு யோசனையா? இந்த விஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டு பணத்தை போடுங்க..!

சிறப்பம்சங்கள்:

இதில், 6.79 இன்ச் IPS LCD திரை, 120Hz புதுப்பிப்பு விகிதத்துடன் மிகவும் மென்மையான பயன்பாட்டை கொண்டுள்ளது.

இந்த போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ஏஇ சிப்செட், தினசரி பயன்பாடு மற்றும் போதுமான செயல்திறனை வழங்குகின்றது.

இதில் 108MP பிரதான கேமரா மற்றும் 13MP செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 5030mAh பேட்டரி திறன்கொண்ட, 33W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வசதியுடன் உள்ளது.

அதிகபட்சமாக 128GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB வரை ரேம், ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்துடன் போக்கோவின் ஹைப்பர் OS (Hyper OS) கொடுக்கப்பட்டுள்ளது.