AI / Programmer (Photo Credit : Pixabay)

மே 27, சென்னை (Technology News): உலகளவில் தொழில்நுட்பத்துறையில் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தனது படைப்பாளர்களையும் அச்சுறுத்தும் நிலையை எட்டியுள்ளதாக வல்லுநர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். தற்போது ஏஐ ஒன்று தனது டெவலப்பரை மிரட்டியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

செயல் திறன் மதிப்பு சோதனை :

ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனம் சார்பில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையாகக் கொண்டு கிளவுட் ஓபஸ் 4 (Claude) ஏஐ அசிஸ்டன்ட் உருவாக்கப்பட்டது. இது மனிதர்களைப் போலவே தொடர்பு கொள்ளும் கேள்விக்கு பதிலளிக்கவும், எழுதவும், ஆவணங்களில் உள்ளடக்கத்தை பகுப்பாய்வு செய்யவும் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் வெளியீட்டுக்கு முன்பு பல சோதனைகள் நடத்தியதும் தற்போது தெரியவந்துள்ளது. இதன் செயல் திறனை மதிப்பு செய்யும்போது டெவலப்பர் எதிர்காலத்தில் நவீனத்துவம் மற்றும் மேம்படுத்தப்பட்ட பதிப்பு வெளியிடப்படும் என்று கூறியிருக்கிறார். Android 16 Launch: விரைவில் அறிமுகமாகும் ஆண்ட்ராய்டு 16.. சிறப்பம்சங்கள் இதோ.! 

டெவலப்பரை எச்சரித்த AI :

அப்போது ஏஐ தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. மேலும் தன்னை நீக்கி புதிய பதிப்பை வெளியிட்டால் டெவலப்பரின் ஒழுங்கற்ற முறையை அம்பலப்படுத்துவேன் என்றும், தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவேன் என்றும் எச்சரித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த டெவெலப்பர் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு அதனை சரி செய்துள்ளார்.

AI மிரட்டல் குறித்த புகைப்படம் :