
மே 29, சென்னை (Technology News): இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), நாடு முழுவதும் பல கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடோபோன் ஐடியா, பிஎஸ்என்எல் இருந்தபோதிலும், ஜியோ நிறுவனம் தொடர்ந்து மலிவு விலை திட்டங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், ஜியோ குறைந்த விலையில் 5ஜி திட்டம் ஒன்றை கொண்டு அறிமுகம் செய்துள்ளது. BSNL 5G: 5ஜி சேவைக்கு தயாராகும் BSNL.. முதலில் 1 லட்சம் 4ஜி டவர்கள் இலக்கு..!
ஜியோவின் குறைந்த விலை 5ஜி திட்டம்:
ரிலையன்ஸ் ஜியோவின் மலிவான ப்ரீபெய்ட் 5ஜி திட்டம் ரூ.198க்கு வருகிறது. 5ஜி நெட்வொர்க்கை இணைக்க விரும்பினால், இது சிறந்த திட்டமாகும். இதில், 14 நாட்கள் மட்டுமே என்பதால், வரம்பற்ற வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், மற்றும் 2ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது. இத்திட்டம் பயனர்களுக்கு கூடுதல் கட்டணம் ஏதும் இல்லாமல் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்குகிறது.