Oakley Meta HSTN (Photo Credit : @oakley X)

ஜூன் 23, சென்னை (Technology News): ஓக்லே (Oakley) நிறுவனத்தின் ஸ்மார்ட் கண்ணாடி தற்போது ஏஐ அமைப்புடன் (AI Technology) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஏஐ கண்ணாடியில் போட்டோ, வீடியோ எடுக்கும் வகையில் கேமரா மைக், ஸ்பீக்கர் போன்றவையும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்ணாடியின் விலையாக ரூ.34,500 நியமனம் செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள் பிரத்தியேகமாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஏஐ கண்ணாடியை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 8 மணிநேரம் வரை பயன்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.

ஓக்லே ஸ்மார்ட் கண்ணாடியின் சிறப்பம்சங்கள் :

ஸ்மார்ட் கண்ணாடியில் 3k அல்ட்ரா எச்டி கேமரா கொடுக்கப்பட்டுள்ளதால், 1080P ஐ விட தெளிவான காட்சிகளையும் காணலாம். காதுகளில் மாட்டாமல் ஒலியை கேட்கும் ஸ்பீக்கர் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. அதுபோல ஹே மெட்டா (Hey Meta) என மெட்டா வாய்ஸ் அசிஸ்டன்ட் மூலமும் வீடியோ எடுக்கலாம். காற்றின் வேகம், காலநிலை உள்ளிட்ட தகவல்களையும் கேட்கலாம். இந்த ஸ்மார்ட் கண்ணாடியில் ஐபிஎக்ஸ் 4 வாட்டர் ப்ரூப் இருப்பதால் மழையிலும் உபயோகிக்கலாம். இதன் அதிவேக சார்ஜிங் வசதி குறைந்தபட்சமாக 20 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்யும் வசதி கொண்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால் கிட்டத்தட்ட 8 மணிநேரம் வரை பயன்படுத்தலாம். சார்ஜிங் கேஸ்-ஐ பயன்படுத்துவதால் 48 மணிநேரம் வரையும் உபயோகிக்கலாம். Vivo Y400 Pro 5G: பட்ஜெட் விலையில் அசத்தல் அம்சங்களுடன் களமிறங்கிய விவோ ஒய்400 ப்ரோ 5ஜி.! 

இந்தியாவில் விற்பனை எப்போது?

ஓக்லே மற்றும் மெட்டா நிறுவனம் (Meta) இணைந்து வடிவமைத்துள்ள இந்த ஸ்மார்ட் கண்ணாடியின் லிமிடெட் எடிஷன் அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இந்திய மதிப்பில் ரூ.43,200 க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள் மெக்ஸிகோ, இந்தியா உள்ளிட்ட பிற ஆசிய, ஐரோப்பிய நாடுகளுக்கும் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், நேரடி விற்பனைக்கான விலையானது இந்திய மதிப்பில் ரூ.34,500 என்றும் கூறப்படுகிறது.

ஏஐ வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கண்ணாடி குறித்து ஓக்லே நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ (Oakley Meta HSTN):