
பிப்ரவரி 17, சென்னை (Technology News): வாழ்க்கையில் அனைவரின் லட்சியமாக இருப்பதும் தற்போது உள்ள பொருளாதார நிலையை சற்று உயர்த்த வேண்டும் என்பதே. பலர் அதற்கு சொத்துக்கள் சேமிக்கவும், பணத்தை இரட்டிப்பாக்கவும் முயற்சிகள் செய்து சொத்துக்களை சேமித்து வைப்பர். ஆனால் ஒரு சில தவறுகள் செய்வதால் சொத்துக்கள் சேர்க்க முடியாமல் போவதோடு, நிதிநிலை இருப்பதை விட குறையவும் வாய்ப்புள்ளது. அவைகளை ஆரம்பத்திலேயே சரி செய்தால் பொருளாதார நிலையை மேம்படுத்தலாம்.
ஆடம்பர வீடு அவசியமா?
பொருளாதார நிலையை உயர்த்துவதாக நினைத்து பலரும் அறியாமல் செய்யும் தவறாக இருப்பது ஆடம்பரமாக வீடு கட்டுவது. ஆனால் வீட்டைக் கட்டும் போது அளவுக்கு அதிகமான பணத்தை செலவு செய்வது ஒரு வகையில் ஏழையாகவே வைத்துவிடும். வீடு என்பது ஒருமுறை கட்டுவது தான் அதனால் அனைத்து வசதிகளுடன் மிகப் பெரியதாக கட்டிவிடலாம் என வருமானத்தையும் சேமிப்பையும் மீறி அதிகமாக கடன் வாங்கி ஆடம்பர வீடு அவசியமற்றது. அதிலும் இன்றைய தலைமுறையினர் அடிக்கடி வேலை மற்றும் இட மாற்றம் போன்றவைகள் ஏற்படும் போது வீட்டை பயனில்லாமல் விட்டு செல்ல வேண்டியிருக்கும். இதற்கு ஆடம்பர வீடு தேவையற்றது. நிரந்திர வீடு வாங்கும் அல்லது கட்டும் போது ஆட்களின் எண்ணிக்கை பொருத்தும், தேவையைப் பொருத்துமே வீடு கட்டலாம். மேலும் நகரத்தில் நிரந்தர வீடு கட்டினால், மாடி வீடு எடுக்கும் போது எதிர்காலத்தில் வாடகைக்கு விடுமாரும் கட்டலாம். இது ஒரு வகையில் முதலீடாக இருக்கும். ஆனால் பெருமைக்காக சொகுசு வீடு வாங்குவது வயதாகும் வரை கடனாளி ஆக்கிவிடும். Tech Tips in Tamil: செல்போன் பேட்டரி நீடித்து இருக்க வேண்டுமா? அப்போ இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க..!
மின்சாதனங்களை மாற்றுவது:
இன்றைய தலைமுறையினர் அடிக்கடி ஸ்மார்ட் போன், கார், லேப்டாப் போன்றவற்றை மாற்றுவதைப் பழக்கப்படுத்திக் கொண்டனர். சிலர் சொகுசு வாகனம், விலையுயர்ந்த மொபைல்களை வாங்கி அதன் அடுத்த மாடல் வெளியானது இவைகளை மாற்றிவிடுவர். இந்த பழக்கம் ஒருவரின் நிதி நிலையை உயர்த்தாது. மேலும் வாகனங்களுக்கு வாங்கும் கடன்கள் அதிகரித்து கொண்டே இருக்கும். வாங்கும் சம்பலம் இதில் கரைந்து கொண்டே தான் இருக்கும். மேலும் இது போன்ற மின் சாதங்கள் முதலீடாக கூட இருக்காது. இவைகளின் பாராமரிப்பிற்கு செலவு ஆகிக் கொண்டு தான் இருக்கும். வாகனங்களின் மதிப்பு குறைந்து கொண்டே வரும். இதனால் சிறிய காரை வாங்கினாலும், நீண்ட காலம் பய்னப்டுத்துவது தான் சிறந்தது. இதே போல வீடுகளில் இருக்கும் மின் சாதனங்களுக்கு அதிக செலவு செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
பள்ளிக் கட்டணம்:
பெற்றோர்கள் பலரும் செய்யும் தவறுகளில் முதலிடத்தில் இருப்பது தங்கள் குழந்தைகளை, கௌரவமாக இருக்கும் என நினைத்து பெரிய பிரபலமான அதிகம் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அளவிற்கு மீறி பள்ளி, கல்லூரிகளில் பணம் செலுத்துவதால் சேமிப்பிற்கு அல்லது எதிர்கால தேவைக்காக முதலீடோ செய்ய முடியாது. மேலும் எதிர்பாராத நிதி தேவை ஏற்படும் போது பள்ளிக் கட்டணங்கள் கட்டுவதில் சிரமம் ஏற்படலாம். எப்போதும் குழந்தைகளுக்கு தரமான கல்வியை அளிக்க வேண்டுமே தவிர பெருமை பேசுவதற்காக பள்ளி, கல்லூரியில் சேர்க்க கூடாது. சிலர் அதிக கட்டணத்தில் பள்ளிகளில் சேர்த்தும், கூடுதலாக வெளியில் டியூஷன், எக்ஸ்டிரா வகுப்புகளிலும் சேர்த்து விடுவர். இதற்கு குறைவான கட்டணம் வாங்கும் தரமான பள்ளிகளே சிறந்தது.
கவனிக்காத சிறிய செலவுகள்:
சிறிய கசிவுகள் தான் பெரிய சேதத்தை ஏற்படுத்தும். வரவில் சிறிது சிறிதாக செய்யும் செலவே அதிகமான பணத்தை வீணாக்கும். அடிக்கடி வெளியில் சாப்பிடுவது முதல் அதிகம் பயன்படுத்தாது பொருட்களை வாங்கி அடுக்குவதாலும் கவனிக்காமலே குறிப்பிட்ட தொகையை இழக்க வேண்டி வரும். இது அதிகம் பட்ஜெட் போட்டு செலவழிக்காததாலேயே நடக்கும். சம்பலத்திற்கு ஏற்ப செலவு, சேமிப்பு, முதலீடு, கடன் என பிரித்து வைக்க வஏண்டும். இல்லாவிடில் நம்மையும் மீறி பணத்தை செலவழித்துக் கொண்டே தான் இருப்போம். இதில் அலங்கார பொருட்கள் வாங்குவது, சந்தைக்கு புதிதாக வரும் மின் சாதனம் வாங்குவது, ஆடம்பர ஆடைகள் வாங்குவது, அதிகமாக ஓடிடி, டீவி சேனல்களுக்கு ரீசார்ஜ் செய்வது போன்றவை செலவுகளை அதிகரிக்கும்.
முக்கியமான முதலீடும் சேமிப்பும்:
இவைகளை விட, முதலீடு செய்து வருமானத்தை இரட்டிப்பாக்காமல் இருப்பதே பொருளாதார நிலையை அப்படியே வைத்து விடும். பணத்தை சம்பாதிக்க தெரிந்து இரட்டிப்பாக்காமல் இருப்பது எதிர்காலத்தை நிதி ஆபத்தில் தள்ளும். எதிர்கால நிதி தேவைக்குன் முதலீடு, காப்பீடு செய்வது அவசியமான ஒன்று. இது பொருளாதாரத்தை இறக்கிவிடாமல் பார்த்துக் கொள்ளும். தங்களுக்கு தேவையான லாபகரமான திட்டத்தில் பணத்தை சேமித்து வைக்க வேண்டும். அதிக தொகை கிடைக்குமென்ற ஆசையில் அதிக ரிஸ்க் உள்ள இடத்தில் முதலீடு செய்யாமல் நம்பகரமான இடத்தில் தொடர்ச்சியாகவும் நெடுங்கால முதலீடாகவும் செய்வது நிதிநிலை மேம்படுத்தும். காலம் தாழ்த்தில் முதலீடு செய்யக் கூடாது. வயது அதிகரிக்க, பல பொறுப்பும் சுமையை வரும். அவைகளை சமாளிக்க நன்றாக சம்பாதிக்கும் இளம் வயதிலேயெ முதலீட்டையும், சேமிப்பையும் மேற்கொள்ள வேண்டும்.