ஜூன் 04, புதுடெல்லி (New Delhi): விண்வெளி என்பது பல்வேறு ஆச்சரியங்களுக்கு உள்ளானது. விண்வெளி ஆய்வில் உலக நாடுகள் பலரும் ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் நாசாவுடைய (NASA) பங்களிப்பு என்பது முதன்மையானதாக இருக்கிறது. இந்நிலையில், பூமியை நோக்கி JY1 என்ற விண்கல் என்று வந்துக்கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. International Day of Innocent Children Victims of Aggression 2024: ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளுக்கான சர்வதேச தினம்.. இந்த நாளின் நோக்கம் என்ன?.!
JY1 விண்கல்லின் விட்டம் 160 அடி மற்றும் அதன் வேகம் மணிக்கு 37,070 கிலோமீட்டர்கள் (37070 kmph) ஆகும். இந்த சிறுகோள் சுமார் 4.16 மில்லியன் மைல் தொலைவில் பூமியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்திரனுக்கான தூரத்தை விட 17 மடங்கு அதிகமாகும். மேலும் இது குறித்து நாசா துல்லியமாக கண்காணிக்கிறது எனவும் இதனால் எந்த ஆபத்தும் ஏற்படாது, எனவே யாரும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் நாசா அறிவுறுத்தியுள்ளது.