Models (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 21, சென்னை (Chennai News): ஸ்டைலாக இருப்பது என்பது அதிக விலையில் பிரண்டடாக டிரஸ் அணிவது அல்ல. பொருத்தமான ஆடைகளை இடத்திற்கு ஏற்றவாறும் அதனுடன் அணியும் பொருட்களும், மேக்கப்களுமே ஸ்டைலாக காட்டும். டிரெண்டிகாகவும், ஸ்டைலாகவும் தெரிவதற்கு பின்வரும் வழிகளை அடுத்த முறையிலிருந்து ஃபாலோ செய்யுங்கள்.

பொருத்தமான நகைகள்:

எந்தவொரு உயர்ரக ஆடையாக இருந்தாலும் அதற்கு ஏற்ற அக்சசரீஸ் அணியவில்லை எனில் அது முழுமையாக பூர்த்தியடையாது. அதற்காக அதிகமாக செலவு செய்து நகைகளோ, பிறப் பொருட்களோ வாங்க வேண்டும் என்றில்லை. நம்மிடம் உள்ள்ளதை வைத்தே அழகாக அணியலாம். ஏதேனும் தீம்களில் அல்லது கலரில் இருந்தால் அதற்கு ஏற்றவாறு அணிவது கூடுதல் அழகைத் தரும். சில ஆடைகளுக்கு பிளைனாக இருப்பதே பொருந்தும். சிம்புளாக வாட்ச் அணிந்தால் லுக் நிறைவடையும். Sani Peyarchi Palan 2025: சனிப் பெயர்ச்சி 2025: கும்பம் ராசிக்கு ஏழரை சனி எப்படி இருக்கப் போகுது தெரியுமா? விபரம் உள்ளே.!

ஆடை தேர்வு:

ஆடைத் தேர்வு செய்கையில் உடல் அமைப்பிற்கு பொருந்துமாறு அணிய வேண்டும். மேலும் ஆடைகளின் நிறங்களும் நமது நிறத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். பளிச்சென்று தெரியும் ஆடைகளும் அல்லது பொருந்தாத ஆடைகளும் அழகைக் குறைத்துவிடும். தளர்வான ஆடைகள் அணிகையில் இடுப்பு உயரம் சரியானதாக இருக்கிறதா என்று பார்க்கவும். ஏனெனில் இது உயரத்தைக் குறைத்தும், ஷேப் இல்லாமலும் காட்டும். சாரிகளுக்கு ஷேப் வியர்கள் வடிவம் கொடுக்கும். உள்ளாடைகளிலும் பொருத்தமான தேர்வு அவசியம். இடத்திற்கு ஏற்ப ஆடைகள் அணிவதும் ஸ்டைலாக காட்டுவதற்கு உதவும்.

சிம்பிள் மேக்-அப்:

அழகாகவும் ஸ்டைலாக காட்டுவதற்கு முக்கியாமனது மேக்அப். காஸ்ட்லி ஆடைகள் அணிந்தும் மேக்கப் நன்றாக இல்லை எனில் அது ஸ்டைலாகவே காட்டாது. மேலும் அணிந்துகொள்ளும் ஆடைகளுக்கு ஏற்ப ஹெவி, லட், அல்லது பிற விதத்தில் மேக்கப் செய்து கொள்ளலாம். உதாரணமாக, ஜீன்ஸ் அணியும் போது லைட் மேகப் பொருத்தமாக அமையும். எந்த ஆடையானலும் ஹேர் ஸ்டைலிலும் கவனம் செலுத்துங்கள். ஒரே ஹேர் ஸ்டைலை பின்பற்றாமல் பல டிசைன்களில் முயற்சிகள் மேற்கொள்ளுங்கள்.

உங்கள் ஸ்டைலில் இருங்கள்:

டிரெண்டிங்கை ஃபாலோ செய்கிறோம் என்று தங்கள் உடலுக்கும் லுக்கிற்கும் செட் ஆகாத ஆடைகளை அணிவது ஸ்டைலாகவே இருக்காது. பலருக்கும் அடுத்தவர்களுக்கு நன்றாக இருக்கிறதென்று அதையே செலவு செய்து வாங்கும் பழக்க இருக்கும். ஆனால் அது செடாக வில்லை என்றாலும் வாங்கியதற்காக அணிவார்கள். இது பார்க்கவும் நன்றாக இருக்காது. அதனால் தங்களுடைய ஸ்டைலிலேயே ஆடைகளை தேர்ந்து எடுக்கலாம். அதற்காக தங்களை ஃபேஷனில் அப்டேட் ஆக வேண்டாம் என்றில்லை. புதிய முயற்சிகள் பொருத்தமாக இருந்தால் டிரை செய்வதில் தப்பில்லை. தங்களுடைய யுனிக் ஸ்டைலிலேயே புது முயற்சிகள் செய்யலாம்.