Andhra Pradesh Horror: 8 வயது சிறுமி பலாத்காரம், கொலை; கஞ்சா போதையில் வெறிச்செயல்.. பிஸ்கட் கொடுப்பதாக நெஞ்சை பதறவைக்கும் துயரம்.!
கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் எட்டு வயது சிறுமிக்கு பிஸ்கட் தருவதாக கூறி அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
ஜூலை 18, தொரவரிசத்திரம் (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், திருப்பத்தூர் மாவட்டத்தில் எட்டு வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறையினர் அளித்த புகாரின்படி, தொரவரிசத்திரம் மண்டலம் நெலபல்லியில் உள்ள அரிசி ஆலை அருகே உள்ள காட்டுப் பகுதியில் நேற்று மாலை சிறுமி ஒருவர் இறந்து கிடந்துள்ளார். Laser Eye Surgery: கண் பார்வையில் பிரச்சனையா? லேசர் கண் சிகிச்சையால் பார்வைத்திறன் மேம்பாடு; விபரம் இதோ.!
அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதன்படி சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அரிசி ஆலையில் பணிபுரியும் பீகாரைச் சேர்ந்த திலீப் (22) என்பவர் சிறுமியை பிஸ்கட் தருவதாக கூறி, காட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. கழுத்து நெரிக்கப்பட்டதால் சிறுமி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து அரிசி ஆலையில் கஞ்சா போதையில் இருந்த திலீபாவை காவல் துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
తిరుపతిలో 8 ఏళ్ల చిన్నారిపై హత్యచారం
గంజాయి మత్తులో ఓ యువకుడు బిస్కెట్లు ఇస్తానని చెప్పి ఎనిమిదేళ్ల బాలికను తీసుకెళ్లి ఆమెపై అఘాయిత్యం చేసి, హతమార్చాడు. pic.twitter.com/Rg7JaTVZ6D
— ChotaNews (@ChotaNewsTelugu) July 18, 2024
(The above story first appeared on LatestLY on Jul 18, 2024 01:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

