மே 02, சென்னை (Technology News): சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் இ-பிளேன் (ePlane). இந்த நிறுவனம் விரைவில் பறக்கும் எலெக்ட்ரிக் டாக்சியின் (Electric Air Taxi) மாதிரி மாடலை உருவாக்க இருக்கின்றது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த பணிகள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. China Highway Collapse: சீனாவில் திடீரென இடிந்து விழுந்த நெடுஞ்சாலை.. 36 பேர் பரிதாப பலி..!
இந்த பறக்கும் டாக்சியில் (Flying Taxi) விமானி உடன் சேர்த்து சுமார் 4 பேர் வரை பயணிக்க முடியும். இதன் மூலம் பயணிகள் போக்குவரத்துக்கு நெரிசலில் சிக்காமல் வேகமாக செல்ல இயலும். இந்த பறக்கும் டாக்சிகள் பறப்பதற்கு ஓடு தளம் தேவைப்படாது. முதலில் இதன் பறக்கும் டாக்சி சேவை தலைநகர் டெல்லியை மையமாகக் கொண்டே இயக்கப்பட இருக்கின்றது. மேலும் 2026 ஆம் ஆண்டிற்குள் பறக்கும் டாக்சிகள் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது.