ஜூலை 17, சென்னை (Technology News): சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை தொடங்கிய வெறும் 3 மணி நேரத்தில் 1 லட்சம் யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் இந்த ஸ்மார்ட்போனின் இரண்டாவது விற்பனை இன்று (ஜூலை 17) நடக்கவுள்ளது.
விலை: சிஎம்எப் போன் 1 ஸ்மார்ட்போன் ஆனது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் 6ஜிபி ரேம் ஆப்ஷனின் அறிமுக விலை ரூ.15,999 ஆகும்; 8ஜிபி ரேம் ஆப்ஷனின் அறிமுக விலை ரூ.17,999 ஆகும். Oil Tanker Capsizes Off Oman: ஓமன் நாட்டில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்து.. 16 பேர் மாயம்..!
சிறப்பம்சங்கள்: டூயல் சிம் ஆதரவுடன் வரும் சிஎம்எப் போன் 1 ஆனது ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் 2.6 மூலம் இயக்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை, சிஎம்எப் போன் 1 ஆனது எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவு உடனான 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 2எக்ஸ் ஜூமிங் ஆதரவு போர்ட்ரெய்ட் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா, முன்பக்கத்தில் 16-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
CMF Phone 1 makes record breaking sales of 100,000 units in just 3 hours.
Last time we achieved this number in 24 hours was with Nothing Phone (2a). pic.twitter.com/k6vNpghwVU
— CMF by Nothing (@cmfbynothing) July 12, 2024