செப்டம்பர் 27, சென்னை (Technology News): இன்றைய உலகில் கையில் போன் இல்லாமல் யாரும் இல்லை. அதுவும் கூகுள் போகாமல் ஒரு நாளைக் கடக்கும் இளைஞர்கள் கூட இல்லை. குறிப்பாக கூகுள் போகாமல் யாரும் இல்லை. இணைய தேடு பொறி தளத்தில் பல இருந்தாலும், இணையம் என்றாலே அது கூகுள்தான் என்ற பிம்பம் உருவாகியுள்ளது. அப்படி மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைந்துவிட்டு கூகுள் இன்று தன்னுடைய 26வது பிறந்தநாளை (Happy Birthday Google) கொண்டாடுகிறது.
வரலாறு (History of Google): செர்கே ப்ரின், லார் பேஜ் இவர்களின் முயற்சியால் 1998ம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று, கூகுள் தனது தேடுபொறியை அறிமுகப்படுத்தப்பட்டது. முதன்முதலாக கூகுள் நிறுவனத்தின் அலுவலகம் கலிபோர்னியாவில் ஒரு சிறிய கேரேஜில் திறக்கப்பட்டது. 2004 கூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் அறிமுகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து யூடியூப், கூகுள் மேப்ஸ், ஜிமெயில், பிளே ஸ்டோர், கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு என அடுத்தடுத்து அப்டேட்களை அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டே வருகிறது. Meesho Mall Expands Brand: அசத்திய மீஷோ.. மாமா எர்த், டென்வர் மற்றும் பாட்டாவுடன் பார்ட்னர்ஷிப்.. இனி ப்ராண்ட் பொருட்களும் விற்பனை..!
உலகம் முழுவதும் 430 கோடிக்கும் அதிகமான பயனாளர்களை வைத்திருக்கும் கூகுள், ஒவ்வொரு நாளும் தன்னை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறது. இதுவரைக்கும் 200க்கும் அதிமான நிறுவனங்களை கூகுள் கையகப்படுத்தி இருக்கிறது. கூகுள் நிறுவனத்தில் 50 ஆயிரம் பணியாளர்களுக்கு மேல் பணிபுரிகிறார்கள். உலகம் முழுவதும் வரைப்படம் மூலம் வழி சொல்வதில் இருந்து, பலரின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் கூகுளுக்கு இன்று 26வது பிறந்தநாள் (Search Engine Giant's Birthday) கொண்டாடப்படுகிறது.