![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/images/2024/09/meesho.jpg?width=380&height=214)
செப்டம்பர் 27, சென்னை (Technology News): தீபாவளி, தசரா, கிறிஸ்துமஸ் அதைத் தொடர்ந்து ஆங்கில புத்தாண்டு, தை பொங்கல் என அடுத்த 4 மாதங்களுக்கு பண்டிகைக் காலங்கள் தான். இந்த நாள்கள் வந்தாலே விதவிதமான ஆடைகள், வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள் அனைத்தையும் வாங்க நினைப்போம். அதுவும் தற்காலத்தில் ஆன்லைனில் பொருட்களை வாங்குவது அதிகரித்துள்ளது. இதனால் தான் இன்றைக்கு ப்ளீப்காட், அமேசான், மீஷோ என இ- காமர்ஸ் தளங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. Demat Account: உங்களுக்கு டிமேட் கணக்கு உள்ளதா? டிமேட் கணக்கு தொடங்குவது எப்படி? வாங்க தெரிஞ்சிக்கலாம்.!
அதிலும் பண்டிகைக் காலங்களில் விதவிதமான ஆஃபர்களையும் நமக்கு வாரி வழங்குகிறது. இந்த வரிசையில் பொருள்களுக்கான அதிரடி ஆஃபர்களை வழங்குவதோடு மட்டுமின்றி பிரபல இ- காமர்ஸ் நிறுவனமான மீஷோ பண்டிகைக் காலத்திற்காக மீஷோ மாலில் அதன் சலுகைகளை விரிவுபடுத்தவுள்ளது. அதற்காக மாமா எர்த் (Mamaearth), டென்வர் (Denver), ஹிமாலயா (Himalaya), Bajaj, Joy, Lotus Herbals, Biotique, பாட்டா (Bata), Paragon, Relaxo, Liberty போன்ற பிராண்டுகளை அதன் 1,000க்கும் மேற்பட்ட பிராண்டுகளின் போர்ட்ஃபோலியோவில் சேர்த்துள்ளது.
மீஷோ (Meesho) நிறுவனத்தை ஐஐடி கல்லூரி பட்டதாரிகளான விதித் ஆத்ரே மற்றும் சஞ்சீவ் பர்ன்வால் ஆகியோர் இணைந்து நிறுவினர். மீஷோ பிற ஈகாமர்ஸ் நிறுவனங்கள் போன்று இல்லாமல், ரீசெல்லர் கான்செப்ட், டார்கெட் மார்கெட் ஆக கிராமம், சிறு நகரங்கள், 2ஆம் தர நகரங்கள் கொண்டுள்ளதால் சந்தையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.