மே 02, சென்னை (Technology News): அமேசான் நிறுவனத்தின் கிரேட் கோடை விற்பனை (Amazon Great Summer Sale) மே 2-ஆம் தேதியான இன்றைய தினம் தொடங்கி உள்ளது. அமேசான் நிறுவனத்தின் கிரேட் கோடை விற்பனை பல சலுகைகளுடன் இன்று ஆரம்பமாகியுள்ளது. இதில் சில பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டுகளின் மீது அமேசான் தள்ளுபடிகளை அளிக்கிறது. ஆப்பிள் (Apple), சாம்சங் (Samsung) மற்றும் ஒன்ப்ளஸ் (OnePlus) போன்ற ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவர்களுக்கு, இதன்மூலம் சில பல சிறந்த சலுகைகள் கிடைக்கும்.

குறிப்பாக இந்த விற்பனையில் ஆப்பிள், சாம்சங், ஒன்ப்ளஸ், விவோ, ஒப்போ, மற்றும் பிற பிரபலமான ஸ்மார்ட் போன் மாடல்களில் பல விதமான தள்ளுபடிகளை வழங்குகிறது. இது நம் பணத்தை அதிகம் செலவழிக்காமல், நல்ல ஸ்மார்ட் போன்களை பெற்று செல்ல ஓர் அரிய வாய்ப்பாகும். Benefits Of Beetroot Juice: அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

ஆப்பிள் ஐபோன் 14 (Apple iPhone 14): ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய சிறந்த மாடல், ஐபோன் 14 விலை குறைய வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 (Samsung Galaxy S22): சக்திவாய்ந்த ஆண்ட்ராய்டு அனுபவத்தை பெற விரும்புவர்கள் இந்த ஸ்மார்ட் போனை வாங்கலாம். 58% தள்ளுபடியில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஒன்பிளஸ் நார்டு சிஇ 2 லைட் 5ஜி (OnePlus Nord CE 2 Lite 5G): பட்ஜெட் விலையில் 5G போன் பெறுவதற்கு ஒன்ப்ளஸ் நோர்ட் CE 2 லைட் 5G மிகச்சரியான தேர்வாக இருக்கும். தற்போது, இவை 13% தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகிறது.