Beetroot Juice (Photo Credit: Pixabay)

மே 02, சென்னை (Health Tips): பீட்ரூட் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு காய்கறி ஆகும். குறிப்பாக, இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. பீட்ரூட் ஜூஸ் (Beetroot Juice) குடிப்பதால் நமக்கு ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கும். வெயில் காலத்தில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம். Cat Smuggle In Chennai: சென்னையில் விற்பனை செய்யப்படும் பிரியாணியில் பூனை இறைச்சி பயன்படா?.. திடுக்கிடவைக்கும் தகவல்.!

பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து அதிகளவில் உள்ளது. இது நம் உடலில் நைட்ரிக் அமிலமாக (Nitric Acid) மாற்றமடைந்து, ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. இதன்மூலம் இதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய்கள் விரிவடைந்து ரத்த ஓட்டத்தை சீராக்கி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது. பீட்ரூட் ஜூஸ் உடற்பயிற்சி செய்யத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. இதிலுள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபினை அதிகரித்து தசைகளுக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இது ஜீரண ஆற்றலை சீராக்கி, அஜீரணக் கோளாறு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கிறது.

பீட்ரூட்டில் வைட்டமின் சி, பீட்டா கரோட்டின் (Beta-Carotene) போன்றவையும், ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் மற்றும் மினரல்களும் அதிகமாக உள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தினமும் ஒரு சிறிய டம்ளர் அளவில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது நல்லது. அதிகமாக குடிக்கக் கூடாது. இவ்வாறு, வெயில் காலத்தில் தொடர்ந்து தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது உடலுக்கு பல நன்மைகளை நமக்கு அளிக்கும்.