மே 01, சென்னை (Technology News): ஸ்மார்ட் ஃபோன்களின் முக்கிய விற்பனை சந்தையாக மாறியுள்ள இந்தியாவில், ஒவ்வொரு மாதமும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தனது புதிய படைப்பை அறிமுகம் செய்து வருகிறது. அடுத்தடுத்து பல புதிய நிறுவனங்கள் தங்களது எதிர்காலத்திற்கான ஃபோன்களை அறிமுகம் செய்தாலும், அதில் உள்ள தனித்துவமான படைப்பு காரணமாக வரவேற்பை பெறுகிறது.
அந்த வகையில், புத்தாண்டின் தொடக்கம் முதலாக செல்போன் நிறுவனங்களுக்கு, அதன் தயாரிப்புகள் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளன. அதன்படி, மே மாதம் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட் ஃபோன்களின் விபரங்கள் உங்களின் பார்வைக்காக லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) நிறுவனத்தால் இணைக்கப்பட்டுள்ளது.
1) விவோ வி30 இ (Vivo V30e) மே 2 வெளியீடு: விவோ நிறுவனத்தின் புதிய படைப்பான வி 30 இ ஸ்மார்ட் போன், மே மாதம் இரண்டாம் தேதி சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இது வெல்வட்ரேட் மற்றும் ப்ளூ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. அல்ட்ரா ஸ்லிம் 3டி கர்வ் டிஸ்ப்ளே, 50 எம்பி ஏஐ செல்பி கேமரா, 5500 எம்ஏஹெச் பேட்டரி உட்பட பல அம்சங்களுடன் விவோ வி 30 இ ஸ்மார்ட்போன் வெளியிடப்படுகிறது. HBD Ajith Kumar: தனக்கென தனி வழியை உருவாக்கிய தன்னிகரில்லா நாயகன்; தல அஜித் குமாருக்கு இன்று பிறந்தநாள்.!
Obsessed alert! @ImPalakPurswani here living the PRO life with the all-new vivo V30e. With a Gem Cut Camera Module and a Textured Ribbon design, this smartphone surely adds a touch of luxury to your life!
Click the link below to learn more.https://t.co/d0AeOujg2q#BeThePro… pic.twitter.com/gVwvmTjRtg
— vivo India (@Vivo_India) April 30, 2024
2) சாம்சங் கேலக்ஸி எஸ்55 (Samsung Galaxy S55) மே மாதம் விரைவில் அறிமுகம்: சாம்சங் நிறுவனத்தின் கேலக்சி எஸ்55 ஸ்மார்ட்போன், இம்மாதம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பிலிப்கார்ட் தளத்தில் நேரடியாக விற்பனைக்கு வருகிறது. பல முக்கிய சிறப்பம்சங்களுடன் அறிமுகமாக உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்55 ஸ்மார்ட்போன், 6.7 இன்ச் 120 ஹெட்ஸ் டிஸ்ப்ளே, 45 W ஃபாஸ்ட் சார்ஜர், 5000 எம்ஏஎச் பேட்டரி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி ரோம் ஆகிய அம்சத்துடன் ரூபாய் 23 ஆயிரத்து 999 விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3) ஒன் பிளஸ் நோர்டு 4 (Oneplus Nord 4): ஒன் பிளஸ் நிறுவனத்தின் நோர்டு 4 மாடல், மே மாதம் இந்தியாவில் தனது வெளியீடை உறுதி செய்துள்ளது. 5500 எம்ஏஎச் பேட்டரி, 80 W சார்ஜர், 120 ஹெட்ஸ் டிஸ்ப்ளே, 6.74 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே, சோனி ஐமேஸ் 882 சென்சார், இரட்டை கேமரா ஆகியவற்றுடன் இது வெளியாகிறது. தற்போதைய நிலையில் இதன் வெளியீடு தேதி மட்டும் உறுதி செய்யப்படவில்லை.
அதேபோல, கூகுள் பிக்சல் 8ஏ (Google Pixel 8a), சோனி எக்ஸ்பீரியா ஒன் விஐ, ஓப்போ ஏ 60, ஓப்போ ரெனோ 12 சீரிஸ், போகோ எப்6 5ஜி, விவோ 100 அல்ட்ரா சீரிஸ் ஆகியவை மே மாதங்களில் அறிமுகமாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.